வெள்ளி, 29 ஜூலை, 2016

வணக்கம் மதுரை .. இல்லை இல்லை நமஸ்தே மதுரை .. வோக்ஸ்வாகன் ஹிந்தி பிரசாரம்

அண்ணே மதுரையில் போக்ஸ் வேகன் கார் கம்பெனியின் அலுவலக முகப்பில்என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த அலுவலகம் சென்று கண்டிக்க வேண்டும்’ என்று தம்பி அமர்நாத் (Amarnath Pitchaimani) சொன்னார்.
மதுரையிலிருந்து பொதுக்கூட்டத்திற்காக அத்திப்பட்டி செல்லும் வழியிலிருந்த அந்த நிறுவனத்திற்கு 23 ஆம் தேதி மாலை திராவிட இயக்கத் தமிழர் பேரவை, திராவிடர் கழகத் தோழர்களுடன் சென்றோம். உடன் தோழர் அன்புமதியும் (Anbu Mathi) வந்திருந்தார். ‘மோடி, ராகுல் வந்தாலே வணக்கம் மதுரை என்றுதான் சொல்கிறார்கள். இது முறையல்ல.’ என்று எங்கள் எதிர்ப்பை தெரிவித்து, அதை ‘வணக்கம் மதுரை’ யாக மாற்ற வேண்டும் என்றோம். ‘மாற்றுவதாக’ உறுதியளித்தார் அதன் மேலாளர். மதிமாறன்.wordpress.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக