ஞாயிறு, 24 ஜூலை, 2016

யுவராஜ் மீது பேராசிரியர் சுப.வீரபாண்டியன் புகார் .. தலைவர்களை மிரட்டும் ஜாதிவெறியன் யுவராஜ்


தலைவர்களுக்கு மிரட்டல் விடுப்பதாக யுவராஜ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சுப.வீரபாண்டியன் புகார் கொடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந் நிலையில் யுவராஜ் பேசியதாகக் கூறி ஒரு ஆடியோ பதிவு ‘வாட்ஸ் அப்’ மூலம் பரவி வருகிறது.
அதில், ‘சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் விடுதலை செய்யப் பட்டால் கடவுளின் பிரதிநிதிகள் அவருக்கு தண்டனை கொடுப் பார்கள். ராம்குமாருக்கு ஆதர வாக செயல்படும் அரசியல் தலைவர்களுக்கும் தண்டனை கிடைக்கும்’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் சென்னை பெருநகர காவல் ஆணை யர் அலுவலகத்தில் நேற்று மதியம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில், “கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி, பிணையில் வெளிவந்துள்ள யுவராஜின் குரல் பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
அதில், திமுக தலைவர் மு.கருணாநிதி, விடுதலை சிறுத் தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளராகிய எனக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த எச்சரிக்கையானது, ஒரு கொலை மிரட்டல் தொனியில் அமைந்துள்ளது. தமிழக அரசும், காவல் துறையும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று நம்புகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக