புதன், 13 ஜூலை, 2016

திருவண்ணாமலையில் தலித் குடும்பத்தை பந்தாடிய ஜெயா போலீஸ்

காவல் துறையினர் யாரோ மூன்று தலித்துகளை அதுவும் துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்தினரை அடித்ததை சிலர் கண்டிக்கின்றனர். அதை நினைத்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது.
ரோட்டில் வைத்து அடிக்கக் கூடாதாம்.
வேறு எங்கு வைத்து அடிப்பது?
ரூம் போட்டா அடிக்க முடியும்?
காவல்துறையினர் வேலை அடிப்பது தான்.
உங்களுக்குத் தெரியாதா?
தலித்துகளின் தலையை நீங்கள் வெட்டலாம்.
அவர்கள் அடிக்கக் கூடாதா?
தலித்துகளை நீங்கள் பலாத்காரம் செய்யலாம்.
அவர்கள் லேசாகத் தட்டக்கூடாதா?
வேதத்தில் சொல்லியிருக்கிறது. மத்தளத்தை, பெண்களை, சூத்திரர்களை அடிக்கலாம் என்று.
அவர்கள் என்ன உயர் சாதி மக்களையா அடித்தனர்?
அதனால் தான் எச். ராஜா குரல் கொடுக்கவில்லை.
அதனால் தான் நீதிபதி அய்யாவே மனுவைத் தள்ளுபடி பண்ணிவிட்டார்.
இப்போது புரிகிறதா?
போய் மோடியின் காஸ்ட்யூமை ரசியுங்கள்.  Amudhan Ramalingam Pushpam Facebook

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக