சனி, 23 ஜூலை, 2016

BBC :ஜெர்மன் ம்யூனிக் நகரில் தாக்குதல் நடத்தியவர் 18 வயதான ஈரானியர்

ஜெர்மனியில் ம்யூனிக் நகரில் வணிக வளாகத்தில் ஒன்பது பேரை சுட்டுக் கொன்ற நபர் ஒரு 18 வயது ஈரானிய-ஜெர்மானியர் என்றும் அவர் பல ஆண்டுகளாக ம்யூனிக் நகரில் வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது என்று ஜெர்மன் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் ஜெர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்கெல் ம்யுனிக் நகர காவல் துறை தலைமை அதிகாரி பேசுகையில், அந்த நபர் தனியாக செயல்பட்டு வந்ததாகவும், இதற்கு முன்பு அதிகாரிகளுக்கு தெரியாத நபர் என்றும் குறிப்பிட்டார்.அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் காவல் துறை அதிகாரிகள் அவரை அதிகாரிகள் சுட்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் அதிகாரிகள் இத்தாக்குதல்களை பலர் நடத்தியிருக்கலாம் என்று கருதினர். அவர்களைப் பிடிக்க ஒரு பெரிய மனித வேட்டையை தொடங்கினர். தற்போது பொது போக்குவரத்து சேவைகள் மீண்டும் துவங்கியுள்ளன .
ம்யூனிக் நகர காவல் துறை தலைவர் ஹுபர்டஸ் அண்ரே பேசுகையில், இந்த கட்டத்தில், தாக்குதல்தாரியின் உள்நோக்கம் என்ன என்று தெளிவாக தெரியவில்லை என்றார்.தாக்குதல்தாரி சுடுவதற்கு முன்பு ஏதோ கத்தினார் என்றும் ஆனால் விசாரணை அதிகாரிகள் அதற்கான பொருள் என்ன என்று உறுதிப்படுத்தமுடியவில்லை என்று தெரிவித்துள்ளதாக ஆன்ரே குறிப்பிட்டார்.ஜெர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்கெல் சனிக்கிழமை அன்று ஆல்ப்சில் தனது விடுமுறையை தள்ளிவைத்துவிட்டு ஜெர்மனியின் பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
ஒரு பதின்ம வயது தஞ்சம் கோரி பவரியா மாகாணத்தில் ரயிலில் மக்களை ஒரு கோடாரி மற்றும் கத்தி கொண்டு தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து ம்யூனிக்கில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக