ஞாயிறு, 10 ஜூலை, 2016

700 போலீசார் துணி துவைப்பது தடை .. டிஜிபி உத்தரவு ! நாய்க்கு குளிப்பாட்டுவதும் தடை...

போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளில் வீட்டு வேலைக்கு பயன்படுத்தப்பட்டு வரும் காவலர்களை மீண்டும் போலீஸ் பணிக்கு அனுப்ப டிஜிபி அசோக் குமார் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரிகளின் வீடுகளில் ஏராளமான போலீஸார் தற்போது வீட்டு வேலை செய்து வருகின்றனர். காவலர்களான அவர்கள் வேலைக்காரர்கள் ரேஞ்சுக்கு நடத்தப்படுகின்றனர்.
காய்கறி வாங்குவது, நாயைக் குளிப்பாட்டுவது, தோட்டை வேலை பார்ப்பது, துணி துவைப்பது என்று பல வீட்டு வேலைகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்னையில் மட்டும் 700க்கும் மேற்பட்டோர் இதுபோன்ற வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக