வெள்ளி, 29 ஜூலை, 2016

உங்களுக்கு வசந்தகாலம்! 31,834 புதிய அடிமைகளை வரவேற்ற bogusvotescm ஜெயலலிதா

விழாக்கோலம்போல காட்சி தந்தது ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம். பல்வேறு கட்சிகளில் இருந்தும் அதிமுக-வில் இணைய திரண்டிருந்தனர். சமீபத்தில், மதிமுக-வில் இருந்து வெளியேறிய மதிமுக-வின் மத்திய சென்னை முன்னாள் மாவட்டச் செயலாளர் ரெட்சன் அம்பிகாபதியுடன் ஆயிரக்கணக்கான மதிமுக-வினர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தனர். திமுக, காங்கிரஸ், தமாகா, மார்க்சிஸ்ட், தேமுதிக கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அதிமுக-வில் இணைய அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா. அவர்களை வரவேற்றுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, ‘உங்கள் அனைவரையும் வருக வருக என்று அழைக்கிறேன். ஒரு நல்ல இடத்தில் அனைவரும் இணைந்துள்ளீர். பல்வேறு கட்சியில் இருந்து 31,834 பேர் அதிமுக-வில் இணைந்ததன்மூலம் உங்களுக்கு புது வசந்தகாலம் அமைந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றிபெறும். அதிமுக வெற்றிக்கு கட்சியினர் நீங்கள் தீவிரமாக உழைக்க வேண்டும் என்றதோடு, விழா முழுக்க புன்னகையோடு உற்சாகமாகக் காணப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா.  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக