ஞாயிறு, 17 ஜூலை, 2016

சிகிச்சையால் பார்வை இழந்தவர்களுக்கு 3 லட்சம், மாதம் 1000 ஆயிரம்.. புரட்சி தலைவி அம்மா பெஸ்ட் செர்டாபெல் ட்ரஸ்ட்.. அப்பாடா!

சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் நடந்த கண்புரை அறுவை சிகிச்சையால் நோய் தொற்று ஏற்பட்டு 23 பேருக்கு கண் பார்வை பறி போனது. பின்னர் அரசு உத்தரவின்படி நடந்த உயர் சிகிச்சையில் இருவருக்கு மட்டும் பார்வை திரும்பியது. மற்றவர்களுக்கு சிகிச்சை தொடர்ந்து வருகிறது. இவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கவும் பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர். இந்நிலையில், கண்புரை அறுவை சிகிச்சையால் நோய் தொற்று ஏற்பட்டு, பார்வை இழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதிய திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்கு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், புரட்சித்தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பதற்கு இடம் கிடைத்துள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி, அந்தநல்லூர் ஒன்றியம், மேலகுழுமணி கிராமத்தைச் சேர்ந்த முத்துவீரன் - மலர்க்கொடி ஆகியோரது மகள் பிருந்தாதேவி, தனது தந்தை உடல்நலம் சரியில்லாதவர் என்றும், தனது தாய் கூலி வேலை செய்து குடும்பத்தை வழிநடத்தி வருவதாகவும் தெரிவித்து, மருத்துவப்படிப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டி அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவுக்கு கோரிக்கை வைத்திருந்தார். முதல்வர் ஜெயலலிதா, மாணவி பிருந்தாதேவியின் வேண்டுகோளை கருணை உள்ளத்தோடு பரிசீலித்து, மாணவியின் மருத்துவப் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டார். முதலாம் ஆண்டு கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், புத்தகக் கட்டணம் உட்பட மொத்தம் ரூ.50 ஆயிரம் ‘புரட்சித் தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட்’டில் இருந்து வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக