செவ்வாய், 26 ஜூலை, 2016

இரோம் சர்மிளா அரசியலுக்கு வருகிறார் !16 ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து..

கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த இரோம் சர்மிளா தனது போராட்டத்தை ஆகஸ்ட் 9ம் தேதியுடன் முடித்துக்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் அசாம் ரைபிள்ஸ் படையினரால் 2000-ம் ஆண்டு, 10 அப்பாவி மக்கள் சுட்டுக் கொலை செய்தனர். இதைக்கண்டித்தும் மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய கோரியும்  சர்மிளா தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார். தனது 27-வது வயதில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியதில் இருந்து, துளிநீர்கூட பருகாமல் கடந்த 16 ஆண்டுகளாக பட்டினி கிடந்து போராடி வருகிறார்.
உண்ணாவிரதம் தொடங்கிய 3-வது நாளில் மணிப்பூர் மாநில அரசால் தற்கொலைக்கு முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டார்.இதையடுத்து  அவரை கைது செய்த காவல் துறையினர்  பலவந்தமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். ஐரோம் ஷர்மிளா  நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு மூக்கு மூலமாக திரவ உணவு பொருள் அவருக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 16 ஆண்டுகளுக்கு பிறகு தனது உண்னா விரதத்தை நிறுத்திக்கொள்ள ஐரோம் ஷர்மிளா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமணம் செய்து கொள்ள ஐரோம் ஷர்மிளா முடிவு செய்துள்ளதாகவும், தொடர்ந்து தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான உதவியாளர் தெரிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதியுடன் உண்ணா விரதத்தை நிறுத்திக்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.   theekkathir.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக