வியாழன், 23 ஜூன், 2016

WHO : மதுரைதான் இந்தியாவிலேயே சுத்தமான காற்று நிறைந்த நகரம் ! உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் சுத்தமான காற்று நிறைந்துள்ள நகரங்கள் பட்டியலை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது. இதில் கேரளத்தில் உள்ள கொல்லம், பத்தனம் திட்டா நகரங்களும், கர்நாடகாவில் ஹசன் நகரமும், தமிழகத்தின் மதுரையும் இடம் பெற்றுள்ளன. இது தவிர புதுச்சேரியும் இந்தப் பட்டியலில் உள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 5 நகரங்களுமே தென்னகத்தைச் சேர்ந்தவைதான். வட இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் காற்றில் அதிக மாசு கலந்துள்ளது. குறிப்பாக உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள நகரங்களில் காற்றில் அதிகளவு மாசு கலந்துள்ளதாம். காற்றில் அதிக மாசு கலந்துள்ள நகரங்களில் இந்தியாவில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. பாட்னா, குவாலியர், ராய்ப்பூர், அகமதாபாத், லக்னோ, ஃபரிதாபாத், கான்பூர், அம்ரிஸ்தர், லூதியானா நகரங்களிலும் காற்றில் அதிக மாசு உள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. விகடன்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக