வியாழன், 2 ஜூன், 2016

SRM பச்சை முத்து பதில் சொல்லவேண்டும்! தயாரிப்பாளர் மதன் எங்கே? உயிரோடுதான் இருக்கிறாரா?

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரும் கல்வி வியாபாரியுமான பச்சை முத்து என்னவோ முழு பூசணிக்காயை அமுக்குகிறார்?  கல்வி கொள்ளை கணக்கில் வராத பணத்தையும் பினாமி மதன் மூலம் சினிமாவில்  முதலீடு செய்து விட்டு.... மதனை என்ன  பண்ணினார்.....?  இப்படியாக தானே மக்கள் பேசி கொள்கிறார்கள் ?/எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மருத்துவ படிப்பு இடம் வாங்கித்தருவதாகக்கூறி ஒவ்வொருவரிடமும் 1 கோடி முதல் 3 கோடி வரை வசூலித்திருக்கிறார் மதன்.  100 கோடி வரை வசூலித்து மோசடி செய்திருப்பதாக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்>முன்னதாக,  சென்னை வளசரவாக்கத்தில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரி நிறுவனர் பாரிவேந்தரின் வீட்டை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் போராட் டம் நடத்தினர் .;எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கையின் போது ஒவ்வொரு ஆண்டும் பணம் வாங்கிக்கொண்டு வந்ததாகவும், தற்போது பணம் கொடுத்தவர்கள் யாரும் பயப்பட வேண்டாம்.  உங்கள் பணம் எல்லாம் எஸ்.ஆர்.எம். நிறுவனத்திடம் உள்ளது என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார் மதன்.   ஆனால், எஸ்.ஆர்.எம். நிறுவன அதிபர் பாரிவேந்தர், மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தார்கள் எல்லோரும் போலீசாரிடம் சென்று முறையிடுங்கள் என்று அறிக்கை விட்டார்.;இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் பாரிவேந்தர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நக்கீரன்,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக