எம்முடன் இமயம் என நின்றிருந்தவர். சமூகமாற்றத்துடன் இணைந்த ஈழவிடுதலைக்கு கைமாறு கருதாது உழைத்த மனிதர்.
உயர்ந்த வசிகரமான அந்த மனிதருக்கு ஸ்ராலின் என்று பெயரிட்டவர் ஈ.வெ.ரா பெரியார்.
ஒரு சட்டதரணியான ஸ்ராலின் அண்ணர்75 முழுதாகவே சமூக அரசியல் பணிகளில் ஈடுபட்டவர்.
மார்க்சியம்;- பெரியாரியம் இரண்டையுமே தனது வழிகாட்டல் கொள்கைககளாக வரிந்த கொண்டவர்.
ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி பாரம்பரியத்தைச் சேர்ந்த எமக்கு கும்பகோணம் -தஞ்சாவூர் அதன் சுற்றயல் கிராமங்களில் ஒரு பெரும் ஆதரவுத் தளத்தை ஏற்படுத்தி தந்தவர்.
நீங்கள் ஆயிரம் என்ன பத்தாயிரம் பேர் வந்தாலும் அத்தனைபேருக்கும் இருப்பிடமும் -உணவும்- பாதுகாப்பும் வழங்குவேன் புன்முறுவலுடன் அசாதாரண தன்னம்பிக்கையுடன் மலையென நின்று காரியமாற்றயவர்.
இனம்புரியாத வசீகரமும்- ஈர்ப்பும் அவரின் வார்தைகளில் கலந்திருக்கும். அவர் தோழரே என அழைக்கும் போதும் அவரது நடைமுறைகளிலும் அது தெளிவாக பிரதிபலிக்கும். மிக மிக எளிமையான மனிதர் அவர்.
10 ஆண்டுகளுக்கு மேலாக அவர் புற்று நோயுடன் போராடினார்.
அவர் சவால்கள் -நெருக்கடிகள் -வறுமை என எல்லா நிலைகளிலும் எம்முடன் நின்றவர். தெம்பூட்டியவர். தன்னம்பிக்கை ஏற்படுத்தியவர்.
அவரின் குடும்பத்தினர்- உற்ற சுற்றத்தினர்- தோழர்கள்- ஊரவர்கள் எல்லோரும் எம்முடன் தோழமை நட்பு பாராட்டினார்கள்.
கும்பக்கோணத்தை பொறுத்தவரை ஈபிஆர் எல் எஃப் பாரம்பரியம் 'ஊர் கூடி இழுத்த தேர்".
'இங்கிவரை நாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்'; என்ற உணர்வை ஏற்படுத்தியவர் ஸ்ராலின் அண்ணை.
இன்னொரு நாட்டில் இருந்து அடைக்கலம் புகுந்த எமக்கு தஞ்சை தரணியையே திரட்டி ஆதரவு நல்கியவர்.
தோழர் நாபாவின் ஆத்மார்த்த தோழா-; நண்பர்.
முற்போக்கு-பெரியாரிய பகுத்தறிவு இயக்கம்- எமது போராட்டவரலாற்றின் பிரிக்கமுடியாத பாகம்.
சமூகம் பற்றிய அவரது பார்வை விசாலமானது.
அவரது வாழ்வும் -பணியும் தனியாக பதிவு செய்யப்பட வேண்டியது.
அவரது குடும்பம் பிள்ளைகளுக்கு தோழர்களுக்கு ஊரவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஸ்டாலின் அண்ணைக்கு எம்புரட்சிகர அஞ்சலிகள்.
Rip stalin mama
பதிலளிநீக்குRIP Stalin thatha
பதிலளிநீக்கு