புதன், 8 ஜூன், 2016

Non Stop கூரியர்.. சதுரங்க வேட்டையை மிஞ்சிய மோசடி... கோடிக்கணக்கில் சுர்ட்டிய சையத் அன்வர்

"இனிமே இதுதான்... இதுமட்டும்தான்... நான் ஸ்டாப் கூரியர்... நான் ஸ்டாப் கூரியர். வாடிப்பட்டியோ, வாடிகன் சிட்டியோ மிஸ்டுகால் கொடுத்தால் போதும்... கூரியர் இலக்கை சென்று சேரும். குறித்த நேரத்தில் சென்று சேரும். இது நம்ம கூரியர்...''’ பிரபல நடிகை தேவயானி இப்படி டி.வி. விளம்பரத்தில் வந்து "‘நீங்களும் பிராஞ்ச்சஸை தொடங்கி செயல்பட வேண் டுமா? உடனே தொடர்பு கொள்ளுங்கள்'’என்று நான்ஸ்டாப்பாக கூவி அழைத்தால், பிசினஸ் தொடங்கவேண்டும் என்ற ஆசையில் இருக்கும் நீங்கள் என்ன செய்வீர்கள்?
இந்தியா முழுக்க கிளை பரப்பிக்கொண் டிருக்கும் சென்னை வடபழனியை (7, சிவன் கோயில் தெரு) தலைமையிடமாகக் கொண்ட "நான்ஸ்டாப் கூரியர் அண்ட் கார்கோ'’ கம்பெனியின் ஏஜென்சியாக செயல்பட டோல்ஃப்ரீ நம்பருக்கு தொடர்புகொண்டவர் களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம், நக்கீரனுக்கும் காவல்துறைக்கும் புகார்களாய் குவிய... விசாரிக்கத் தொடங்கினால் "சதுரங்க வேட்டை'’ சினிமா வையே ஓவர்டேக் செய்கிறது இந்தக் கூரியர் நிறுவனத்தின் ஓனர் சையத் அன்வரின் சீட்டிங் வேட்டை. 

பாதிக்கப்பட்ட மதுரை இளைஞர் பிரதீப் குமார் நம்மிடம், ""ஒரு பிராஞ்ச் ஆரம்பிக்க ணும்னா 50,000 ரூபாய் முன்பணம் கட்டணும்.  50 சதவீதம் கமிஷன்ங்குறதால, வருமானத்தில் செலவு போக மாதம் உங்களுக்கு 30,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாய் வரை லாபம் வரும். அதுவே, 10 பிராஞ்ச்களைக்கொண்ட ஒரு எம்.எஃப். ஆரம்பிக்கணும்னா 2 லட்ச ரூபாய். இதுல, மாசம் 1 ணீ லட்சரூபாய் லாபம் வரும். அதுவே, 4 எம்.எஃப்களைக் கொண்ட ஒரு  ‘ஹப்’-ஐ ஆரம்பிக்கணும்னா 5 லட்ச ரூபாய் டெபாசிட் பண்ணணும். இதுல, மாதம் 5 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும். உங்களுக்கு எந்த ஏரியா பிராஞ்ச் வேணும்னு சொல்லி ஒரு மணி நேரத் துக்குள்ள அட்வான்ஸ் கொடுத்துட் டீங்கன்னா அந்த ஏரியாவை ப்ளாக் பண்ணிடலாம். இல்லைன்னா, அது கொஞ்சநேரத்துல புக் ஆகிடும்னு சென்னை வடபழனியிலுள்ள  ‘நான் ஸ்டாப் கூரியர் அண்ட் கார்கோ’ ரீஜினல் ஆபீஸின் டெவலப்மெண்ட் மேனேஜர் என்று அறிமுகப் படுத்திக்கொண்ட கார்த்திகேயன், என்னை அவசரப்படுத்த... உடனே அட்வான்ஸ் பணத்தை நெட்பேங்கிங் மூலமா அனுப்பிட்டேன். அதுக்கப்புறம் ரெண்டுநாள் கழிச்சு, மொத்தப் பணத்தையும் அனுப்பிட்டு மதுரை கே.கே.நகரில் 1000 சதுர அடியில் 1 லட்ச ரூபாய் செலவு செய்து அலுவலகம் ஆரம்பிச்சேன். இந்தச் சூழ்நிலையிலதான் என்னோட நண்பர் செந்தில்நாதனையும் இந்த பிசினஸில் சேர்த்துவிட்டேன்''’என்று சொல்ல... அதற்குப் பிறகு என்ன நடந்தது? செந்தில்நாதன் தொடர்ந்தார்... “""இந்தியாவிலேயே நம்பர்-1 கூரியர் கம்பெனி மட்டுமில்ல, உலகம் முழுக்க நாமதான் கூரியர் அனுப்பப்போறோம். நேஷனலைஸ்டு பேங்க்ல எல்லாம் நாம டை-அப்ல இருக்கோம்னு சொன்னார்,  மதுரை எஸ்.எஸ். காலனியில இருக்கிற நான்ஸ்டாப் கூரியர் ரீஜினல் ஆபீசின் சையத் உமர். அதை நம்பி, திருச்சியில் 50 பிராஞ்ச்கள் என 1 ‘ஹப்’ கேட்டு 5 லட்சம் பணம் கட்டிவிட்டு... 5 லட்ச ரூபாய் செலவு செய்து 7,000 சதுர அடியில் ஆபீஸ் போட்டுட்டேன்.’அதற்குப் பிறகு நடந்ததை செந்தில்நாதனை அறிமுகப்படுத்திய பிரதீப்குமாரே சொல்கிறார்... “""அவங்க சொன்னது எல்லாம் பச்சைப் பொய்னும், நாங்க ரெண்டு பேரும் நல்லா ஏமாந்துபோயிட்டோம்னு அப்புறம்தான் தெரிஞ்சது. சொன்னபடி, நான்ஸ்டாப் கூரியர் அண்ட் கார்கோ நிறுவனம் எந்த வேலையுமே செய்யலை. இதனால, வெறுத்துப்போயி பணத்தை திருப்பிக் கேட்டதுக்கு, "பணத்தையெல்லாம் திருப்பித்தர முடியாது. நாங்க யாருன்னு தெரியாம இங்க பணம் கேட்டு வராதீங்க'ன்னு மிரட்ட ஆரம்பிச்சுட்டாரு மதுரை ரீஜினல் ஆபீசின் மேனேஜர்னு சொல்லிக்கிட்ட சையத் உமர். அதிர்ச்சியில் உறைந்துபோன நாங்க  சி.எம். செல்லுக்கும் டி.ஜி.பி.க்கும் புகார் அனுப்பிட்டோம். புகார் கொடுத்ததை தாங்கிக்க முடியாம "10 லட்ச ரூபாய் பார்சலை நான் பதுக்கிக்கிட்டதாகவும் இனிமேல் என் னுடன் யாரும் அலுவலக ரீதியான தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது' என்றும் மதுரை-திருச்சி தினப் பத்திரிகைகளில் கடந்த பிப்ரவரி 6-ந் தேதி விளம்பரம் கொடுத்துட்டாரு  ‘நான்ஸ்டாப் கூரியர் அண்ட் கார்கோ’ நிறுவனத்தின் ஓனர் சையத் அன்வர்.  அதே மாசம் 12-ந் தேதி, "இந்தக் கூரியர் நிறுவனத்தில் யாரும் பணம் கட்டி ஏமாந்துவிடாதீர்கள்'னு நானும் மறுப்பு விளம்பரம் கொடுத்தேன். மதுரை சி.சி.பி. போலீஸ்லயும் புகார் கொடுத்துட்டேன். ஆனா, பணத்தையும் திருப்பிக் கொடுக்காம புகாரையும் வாபஸ் வாங்கச்சொல்லி சையத் அன்வரும் அவரது அடியாட் களான மகாலிங்கம், உமர், கார்த்திகேயன் போன்றவர்கள் தொடர்ந்து கொலை மிரட்டல் விட்டுக்கிட்டிருக்காங்க''’’என்கிறார் அதிர்ச்சி விலகாமல்.இதேபோல்தான், சென்னையைச் சேர்ந்த ஜகாங்கீர், மதுரை மேலூரைச் சேர்ந்த சிக்கந்தர் பாட்ஷா,  திருவள்ளூரை சேர்ந்த ஸ்ரீகாந்த், மணி கண்டன்,  கன்னியாகுமரியை சேர்ந்த டேனி, தாம்பரத்தை சேர்ந்த ஹரிகரன், அவரது சகோதரி லதா,  ராமநாதபுரத்தைச் சேர்ந்த கவிதாஸ், மதுரை முத்துமீரான் என பிராஞ்ச்சை தொடங்க லட்சக்கணக்கில் பணம் கட்டி ஏமாந்தவர்களின் பட்டியல் நீள்கிறது. பணத்தை பெற "டீம் ரீஃபண்ட்'’என்ற அமைப்பை உருவாக்கிப் போராடிக்கொண்டி ருக்கும் ஹரிகரன் மற்றும் ஜகாங்கீர் ஆகி யோரோ, “""இவ்வளவு பெரிய மோசடி மன்னனின் நிறுவனத் துக்கு ஐ.பி.எஸ். பாரி, உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரி கள், வருமானவரி துணை இயக்குனர் ஐ.ஆர்.எஸ். நந்தகு மார் எல்லாம் எப்படித்தான் சீஃப் கெஸ்ட்டா வர்றாங்கன்னு தெரியல. என் பின்னால எப்பேர்ப்பட்டவங்க எல்லாம் இருக்காங்கன்னு காண்பிச்சே ப்ளாக்மெயில் பண்றாரு அன்வர்''’என்று குற்றம்சாட் டுகிறார்.யார் இந்த சையத் அன்வர்? காவல்துறையிடம் விசாரித்தபோது... ""ராமநாதபுரத்தைச் சேர்ந்த இவர், இந்து மதத்திலிருந்து முஸ்லிமாக மதம் மாறி ஷஜாதி பேகம் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டவர்.  ராமநாதபுரத்தில் தேவிப் பட்டணம் சாலையில் "அலை யன்ஸ் எக்ஸ்பர்ட் அண்ட் கார்கோ'வை தொடங்கி, சீட்டிங் செய்ததால் சி.சி.பி.யில் புகார் (54/2014) ஆகி மதுரை யிலும் கோவையிலும் சிறையில் இருந்தவர். அதனால்தான், 2015-ல்  நான்ஸ்டாப் கூரியர் அண்ட் கார்கோ நிறுவனத்தை தனது அம்மா வசந்தா மற்றும் மனைவி ஷஜாதி பேகம் பெயரில் தொடங்கி சீட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தற்போது நான்ஸ்டாப் வெஞ்சர்ஸ் என்கிற பெயரில் மாற்றி தன்னையும் தனது மனைவியையும் பார்ட்னர்ஷிப்பாக்கிக் கொண்டார். இதுமட்டுமல்ல,  ஃபிலிப்கார்ட் மாதிரி ஆன்லைன் டெலிவரி பண்ணும் நான்- ஸ்டாப்கார்ட்டுக்கு டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், ஸ்டாக்கிஸ்ட், சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் வேண்டும் என தொலைக்காட்சிகளில் விளம்பரம் கொடுத்து கோடிக்கணக்கில் வசூல்வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறார். மேலும்,  ப்ளாக்ரோமியோ என்னும் டி-ஷர்ட் நிறுவனம், வசந்தம் மீடியா நிறுவனத் தையும் தொடங்கி டீலர்ஷிப்களிடம் விளம்பரங் கள் வாங்குவதன்  மூலமும் பல்வேறு மோசடி களில் ஈடுபட்டுவருகிறார். இவரது மோசடிக்கு துணையாக செயல்படுகிறவர்கள்  ஜெனரல் மேனேஜர், அஸிஸ்டெண்ட் ஜெனரல் மேனேஜர் ரூபா என்கிற சீமா, சம்பத்குமார், ரீஜினல் மேனேஜர் ஆலன் என்கிற லட்சுமி நாராயணன், மேனேஜர்கள் கார்த்திக், செல்வராஜ் ஆகியோர்தான். இவர்களை பிடித்து விசாரித்தாலே சையத் அன்வர் குறித்த பல மோசடிகள் அம்பலமாகி விடும்''’’ என்கிறார்கள். ஏ.டி.ஜி.பி. அலுவலகத் திலும் ஏமாந்தவர்கள் பலர் புகார் கொடுத் திருக்கிறார்கள்.இதுகுறித்து,  கூரியர் தரப்பில் கருத்து கேட்க, நான்ஸ்டாப் கூரியர் அண்ட் கார்கோவின் சென்னை கார்ப்பொரேட் அலுவலகம் 044-4310 0111, சென்னை வேலப்பன் சாவடியிலுள்ள ரீஜினல் அலுவலகம் 044-3200 3811 ஆகிய எண்களுக்கு பலமுறை தொடர்பு  கொண்டபோதும் ரிங் போய்க் கொண்டேயிருந்தது.  நிறுவனத்தின் எம்.டி. சையத் அன்வரின் 97109 09090,  அஸிஸ்டெண்ட் ஜி.எம். ரூபா 96881 11144, ஆர்.எம். ஆலன் 78670 83323 செல்ஃபோன் நம்பர்களுக்கு தொடர்புகொண் டால் ஸ்விட்ச்டு ஆஃப்... நாட் ரீச்சபிள் என்று வருகிறது."இதுதான்... இதுதான்... இதுமட்டும் தான்...'னு விளம்பரம் கொடுத்து சீட்டிங் பண்றீங்களே... இதுமட்டும்தானா? இல்ல... இன்னும் ஏதாவது ப்ளான் இருக்கா?

-மனோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக