சனி, 4 ஜூன், 2016

முதல்வர் ஜெயலலிதா: ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் நாணயத்தின் இருபக்கங்கள் ! முதல்ல எதிர்க்கட்சி MLA க்களை பேச விடுவீர்களா? இல்லையா?

சென்னை: தமிழக சட்டசபையின் கூட்டம் இன்று துவங்கியது. கூட்டத்தில் புதிய சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய முதல்வர் ஜெ., ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் நாணயத்தின் இரு பக்கமாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில், திமுக., எதிர் கட்சியாக செயல்படுமே தவிர எதிரி கட்சியாக இருக்காது என்றார். இன்றைய கூட்டத்தில் சபாநாயகராக தனபாலும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இருவருக்கும் முதல்வர் ஜெ., வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து 2ம் முறை தேர்வான தனபால் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி. தராசு முள் போல் சபாநாயகர் செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல் செயல்பட வேண்டும்.   இந்த அம்மா பம்முறது  நல்லதுக்கில்ல  ஊரையும் சட்டத்தையும் ஏமாற்ற எதோ  ஒரு பெரிய  தில்லு முள்ளுக்கு ப்ளான் பண்றாரு

ஒரு பக்கம் தேய்ந்தால் கூட நாணயம் செல்லாததாகி விடும். என அண்ணாதுரை கூறியுள்ளார். இவர் சொன்னது போல் அவரது பெயரில் தாங்கியுள்ள கட்சியாக நாங்கள் செயல்படுவோம். அவையின் மாண்பை மதிக்க வேண்டும். சபாநாயகரின் மரபை காக்கும் வகையில் , எதிர்கட்சியாக செயல்படும் என நம்புகிறேன் என்றார் முதல்வர் ஜெ., இரண்டாவது முறை தொடர்ந்து என்னை முதல்வராக்கிய மக்களுக்கு நன்றி. எதிர்கட்சி எண்ணிக்கைக்கு போல் அல்லாமல் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப செயல்படுவோம். மக்கள் நலன் காக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும். இவ்வாறு ஜெ., பேசினார்.

அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆகியோர் இணைந்து சபாநாயகரை அழைத்து இருக்கையில் அமர வைத்தனர். முன்னதாக அவைக்கு வந்த ஜெ.,வுக்கு அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர் . ஸ்டாலின் மகிழ்ச்சி ; புதிய சபாநாயகர் தனபாலுக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில்; சபாநாயகரை அழைத்து இருக்கையில் அமர வைத்தது தமக்கு பெருமகிழ்ச்சி என்றார்.

100 ஆண்டு காண உள்ள இந்த அவையில் எதிர்கட்சி தலைவராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. மேலும் அவர் பேசுகையில் சபாநாயகர் கட்சி பாகுபாடு இன்றி அவர் செயல்பட வேண்டும். எதிர்கட்சியாக இருப்போமே தவிர எதிரிகட்சியாக செயல்பட மாட்டோம். பலம் பொருந்திய எதிர்கட்சியான திமுக உரிய முறையில் பணியாற்றும்.இவ்வாறு அவர் கூறினார்.தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக