சனி, 4 ஜூன், 2016

Cassius Clay உலக குத்துச்சண்டை சாம்பியன் முகமதலி காலமானார்


நியூயார்க்: உலக அளவில் பிரபலமான குத்துச்சண்டை வீரர் முகமது அலி இன்று காலமானார். இவருக்கு வயது 74. இவர் 3 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் ஆவார் .அமெரிக்காவை சேர்ந்த இவர், குத்துச்சண்டையில் பங்கேற்ற 61 போட்டிகளில் 56 முறை வெற்றி பெற்றவர். பார்க்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக மரண போராட்டத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று சுவாசக்கோளாறு காரணமாக அவர் உயிரிழந்தார்.இவர் 1981 ம் ஆண்டில் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெற்றார். தி கிரேட்டஸ்ட், பீப்பிள் சாம்பியன் போன்ற பட்டங்களை பெற்றவர் முகம்மது அலி.
முகமது அலியின் மறைவு உலக குத்துச்சண்டை ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நரம்பு மண்டல பாதிப்பு; அவர் கடந்த 2014-ல் நிமோனியா காய்ச்சல் மற்றும் 2015-ல் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு பார்கின்சன்'ஸ் நோய் ஏற்பட்டதான் காரணமாக மீண்டும் முருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பார்கின்சன்'ஸ் என்பது நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உடலின் தசைகள் விறைப்பு ஏற்படும் விதமான நோய் தினமலர்.கம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக