திங்கள், 6 ஜூன், 2016

நடிகை இஷராரா தலைமறைவு! தயாரிப்பாளர்கள் அவதி... சதுரங்க வேட்டை பட கதாநாயகி..

சதுரங்கவேட்டை பட நாயகி இஷாரா தலைமறைவாகிவிட்டதாக தயாரிப்பாளர் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.>ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நாயகனாக நடித்து வெற்றி பெற்ற படம் சதுரங்க வேட்டை. இப்படத்தில் நாயகியாக இஷாரா நடித்தார். தொடர்ந்து பப்பாளி என்ற படத்திலும் நாயகியாக நடித்தார். தற்போது எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டிஎன் 75 கே.கே கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக ஜோசப் லாரன்ஸ் என்பவர் தயாரித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடித்த இஷாரா தலை மறைவாகி விட்டதாக ஜோசப் லாரன்ஸ் புகார் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் கூறுகையில், இஷாராவை இப்படத்திற்காக ரூ. 4 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி 75 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்தோம். பின்னர் படப்பிடிப்பில் இரண்டு நாட்களுமே அவர் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார்.
பின்னர் அவர் படப்பிடிப்பிற்கு கல்தா கொடுத்தார். அவரை தொடர்புகொண்டு பேசியபோது, துபாயில் இருக்கிறேன், கேரளாவில் இருக்கிறேன் என்றார். இந்த பதில் கூற வாட்ஸப்பில் மட்டுமே கூறினார். மேலும் கதை எனக்கு பிடிக்கவில்லை என்றும் காரணம் கூறினார். பின்னர் சமாதான ஆகி படப்பிடிப்பிற்கு வருகிறேன் என்பார். ஆனால் சொன்ன தேதியில் படப்பிடிப்பிற்கு வருவதே இல்லை. இதனால் எங்களுக்கு பல லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கேரளாவில் உள்ள நடிகர் சங்கத்திலும் முறையிட்டோம்.

தற்போது அவரை போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பத்திரிக்கையாளர்களிடம் இது குறித்து பேச உள்ளோம் என்று மெசேஜ் அனுப்பினோம். ஆனாலும் பலனில்லை. இப்படி தயாரிப்பாளர்களை கண்ணீர் சிந்த வைக்கும் நடிகைகளை சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்ய உள்ளோம் என்று கூறினார்.  வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக