செவ்வாய், 7 ஜூன், 2016

வன்னியர்கள் கரகம் எடுக்க நாயுடுக்கள் எதிர்ப்பு....கோயில் திருவிழாவில்....காரணம் ‘சாதி’!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆறுமுகசாமி என்ற சிவனடியார் தமிழில் பாட முயன்றதற்காக தீட்சிதரால் அடித்து வீசப்பட்டார். பல ஆண்டுப் போராட்டங்களுக்கு பின் நீதிமன்றம் சென்று, திருச்சிற்றம்பல மேடையேறி தமிழில் பாட அரசாணையும் கிடைத்து அவர் பாடியபோது, 5000 ஏக்கர் கோயிலை கழுவி தீட்டு கழித்தனர். அந்த ஆறுமுகசாமி வன்னியர். அவருக்காக ஆலய பிரவேசத்திற்கான போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானவர்களில் மூவர் விசிக வினர்.
இந்த நிலையில்,  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் உள்ள குமாரபாளையம் கோயில் விழாவில் கரகம் எடுக்க முனைந்த வன்னியர்களை, நாயுடுக்கள் தடுத்துள்ளனர். தங்கள் சாதியைவிட வன்னியர்கள் கீழானவர்கள் என அவர்கள் காரணம் கூறியுள்ளனர். ஆண்ட பரம்பரை எனக் கூறிக்கொள்ளும் வன்னியர்களும் ‘தீண்டாமை’ அன்பவிக்கிறார்கள் என்கிற விவாதம் சமூக் வலைத்தளங்களில் நிகழ்ந்து வருகிறது.

Kallal Anbalagan நாமக்கல் மாவட்டத்தில் வன்னியர்கள் இழிவானவர்கள் எனக் கருதி கோவிலுக்குக் கரகம் எடுத்துச் செல்ல நாயுடுக்கள் எதிர்ப்பு. Kandasamy Subrகொங்கு மண்டலத்தில் குறிப்பாக பழனி உடுமலை, பொள்ளாச்சி, கிணத்து கடவு பகுதிகளில் , பள்ளர் , பறையர் தோழர்களிடம் அடக்கி வாசிக்கும் நாயக்கர்களும் கவுண்டங்களும்உழைக்கும் வன்னிய மக்களை, அருந்ததியரை விட மோசமாக நடத்துவார்கள்!
ஒடுக்குமுறை சந்தித்திருக்கும் நேரங்களில் வன்னியர்களில் நலனுக்குக்காகப் போராடிவரும் பாமகவின் நிலைப்பாடு எப்படிப்பட்டதாக இருந்திருக்கிறது. உதாரணத்துக்கு ஆலய நுழைவு போராட்டத்தில் பாமக எப்படி நடந்துகொண்டது என்பது பற்றி, அதில் பங்கேற்ற சமூக செயல்பாட்டாளர் பேரறிவாளன் இப்படிச் சொல்கிறார்…
“நானும் ஆலய பிரவேசத்தின்போது அங்கே இருந்தேன். ஆனா கோயிலுக்குள்ள போகலை போராட்ட ஒருங்கிணைப்பாளர் மகஇக வினர் காலை ஆலயம் நுழைந்து ஆறுமுகசாமி பாடியபோது தீட்சிதர்கள் அனைவரும் ஊளையிட்டு பாடவிடாமல் செய்தனர். அதனால் மாலை திரும்பவும் போராட்ட குழுவினர் திரும்பவும் உள்ளே நுழைய முயற்சித்தனர். அப்போது காவல்துறை தடியடி நடத்தி பலரை கைது செய்தனர். அதில் விசிக தோழர்கள் இருவரும், அண்ணாமலை பல்கலைகழக வரலாற்று பிரிவு தலித் சமூகத்து மாணவர் அன்பழகனும் மற்றவர்களோடு கைதாயினர். ஆறுமுகசாமி வன்னியர் என்பதற்காகவே போராட்டக் குழுவில் இடம்பெற்ற பா.ம.க வினர் ஒருவர் கூட கைதாகவும் இல்லை, பிரச்சனைக்குரிய அந்த இடத்துக்கு வரவும் இல்லை”.
‘வன்னியர்’ என்கிற அட்டையைத் தூக்கிப் பிடித்து சாதி படிநிலையில் தனக்குக் கீழே உள்ளதாக தலித் மக்களை ஒடுக்கி அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கும் பாமக, நிகழ்காலத்தில் சாதி ஒடுக்கு முறைக்கு ஆளாகியிருக்கியிருக்கும் தன் சாதியினரின் உரிமை மீட்க என்ன செய்யப் போகிறது? சாதி படிநிலையில் ஒடுக்குவதும் ஒடுக்கப்படுவதும் பெருமைக்குரியதே எனப் பேசப் போகிறதா? அல்லது ஒடுக்குமுறை எதிர்ப்பு போராடுமா? ஒடுக்குமுறையை எதிர்க்குமானால், ஒடுக்குவதையும் கைவிடும் வாய்ப்புல்லது. ஆனால், அதற்கான சாத்தியக்கூறு?!    thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக