செவ்வாய், 28 ஜூன், 2016

இந்தியர்களின் அமெரிக்க மோகம்... சீனா நக்கல்?

புதுடில்லி:  சீன அரசுக்கு சொந்தமான குளோபல் டைம்ஸ் நாளிதழ்:  இந்தியர்களுக்கு தேசியம் என்றால் என்ன என தெரியவில்லை. நீதிநெறி முறை பற்றி தெரியவில்லை. மேற்கத்திய நடைமுறையை பின்பற்றி தங்களை பாழ்படுத்தி கொள்கின்றனர். மேகத்திய நாடுகளை பின்பற்றுகிறது.
இந்தியாவின் பெரிய நோக்கத்தை அமெரிக்கா ஆதரிக்கிறது. ஆனால், அமெரிக்கா மட்டும் முழு உலகம் மட்டுமல்ல. அமெரிக்காவின் ஒப்புதல் பெற்று விட்டால் மட்டும் உலக நாடுகளின் ஒப்புதல் பெற்றது போலாகி விடாது. இது தான் அடிப்படை உண்மை. ஆனால், இதனை இந்தியா புரிந்து கொள்ள மறுக்கிறது.
இந்தியா பெரிய நாடாக விளங்க வேண்டும் என நினைக்கின்றனர். பெரிய நாடுகள் எவ்வாறு நடந்து கொண்டன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். என்எஸ்ஜியில் நாடுகள் உறுப்பினராவதற்கான விதிகளை இதியா கடைப்பிடிக்க வேண்டும். இந்தியா இன்னும் அணுசக்தி பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடவில்லை. ஆனால் என்எஸ்ஜியில் இந்தியா விண்ணப்பித்தவுடன் இந்திய பத்திரிகைகள், சீனா தவிர 47 நாடுகள் ஆதரவு தெரிவிப்பதாக செய்தி வெளியிட்டன. என கூறியுள்ளது.தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக