வியாழன், 2 ஜூன், 2016

என்றும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம்....கலைஞர் உள்ளம்

1. மக்களால் புறம் தள்ளப்பட்ட அரவாணிகளுக்கு ... திருநங்கையர் என்று அழகு பெயர் சூட்டி .. தமிழக அரசில் மட்டுமல்ல...மத்திய அரசிலும் போராடி அவர்களை...மூன்றாம் பாலினமாக உருவாக்கி..சட்ட அங்கீகாரமும் கெசட்பதிவும் பெற்றுத் தந்து ... அவர்களுக்கு வாக்குரிமைகள் தொடங்கி வேலைவாய்ப்புகளிலும் ஒதுக்கீடு தந்து அவர்களுக்கு சமூக அங்கீகாரமும் வாழ்வாதரங்களையும் உருவாக்கித் தந்த .... கலைஞருக்கு ... அவர்கள் செய்த கைம்மாறு என்ன தெரியுமா ? இரட்டை இலைக்கு வாக்களித்து அம்மா வெற்றியை ???? கும்மி அடித்து கொண்டாடினார்கள். கருணாநிதி எங்களுக்கு என்னத்தை செஞ்சு கிழிச்சாரு..எங்களுக்கு எல்லாமே எங்க அம்மா தான் செய்தாங்க என்று ஏசுகிறார்கள் நெஞ்சு பொறுக்குதில்லையே !

2. கலைஞர் அருந்ததியருக்கு 3 % உள் ஒதுக்கீடு தந்தார்...அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பயில பெரும் தொகையை கொடை அளித்தார்... அதன் விளைவாக சில ஆயிரம் பேர்கள் படித்து பட்டம் பெற்று அரசுப்பணிகளை பெற்றார்கள்... அனால்... எல்லா சாதிகளும் எங்களை சரி சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று போராடும் விசிக ..திருமா ... அருந்ததியினரை தனக்கு சமமாக ஏற்றுக்கொள்ள மறுத்தார்..போராட்டங்கள் நடந்தன......அன்றே அவர் கலைஞருக்கு எதிராக மாறிவிட்டார்.... சரி போகட்டும்.... கலைஞரால் பயனடைந்த அருந்ததி இன மக்கள்...தேர்தலில் தினுகவினருக்கு ஆதரவு அளித்தார்களா ??? இல்லையே !..அதன் தலைவகள் திமுக எதிர்த்து போட்டி இட்டார்களே.. இது பச்சைத் துரோகம் இல்லையா ? நினைக்க...நெஞ்சம் பதறவில்லையா ?


3. ஆந்திராவைப்போல இங்கேயும் கிருஸ்துவர்கள் இட ஒதுக்கீடு கேட்டார்கள் ....உடனே கொடுத்தார் கலைஞர்.. அதே கிருஸ்துவர்கள் இட ஒதுக்கீட்டால் எங்களுக்கு பாதிப்பு தான்..கலைஞர் எங்களுக்கு தீங்கு செய்து விட்டார் என்று.. தூற்றினார்கள்.. பிறகு அதையும் அவர்கள் விருப்படி சரி செத்தார்.. என்ன உலகமடா இது ? எதையும் செய்யாத ஜெயாவுக்கு புகழ்மாலை.. சிரிப்புதான் வருது.

4 .
இப்போதும்...
தலித் கிருஸ்துவர்களை தலித் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்றும்....
மீனவர்களை பழங்குடி இன பட்டியலில் சேர்க்க வேண்டும் இன்றும் ..
கலைஞர் குரல் கொடுத்துள்ளார்..
இதன் விளைவாக யார் யார் கலைஞரை தூற்றுவார்களோ ...எதிர்ப்பார்களோ போக போகத்தான் தெரிய வரும்..
இவர்ளைப் பற்றி யாரும் நினைக்காதபோது...கலைஞர் மட்டும் அவர்கள் நலனில் அக்கறை காட்டு கிறார்...

ஆனால் பயனாளிகள்...கலைஞருக்கு வேதனையை மட்டுமே பரிசாக தருகிறார்கள்.
கலைஞர் எல்லோருக்கும் நன்மைகள் செய்தும் அவர்கள் நிந்தனைக்கு ஆளாகிறார்.
தமிழ் மக்கள் இயல்பே இது தானோ ??
Damodaran Chennai  முகநூல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக