திங்கள், 6 ஜூன், 2016

அதிமுக குண்டர்களால் வன்புணர்வு செய்யபட்ட மாணவி உயிருக்கு போராடுகிறார்..... குண்டர்கள வீட்டையும் கொழுத்தினார்கள்

 வீட்டை தீ வைத்துக் கொளுத்தினார்கள் அ.தி.மு.க குண்டர்கள். வீட்டிலிருந்து துணிமணிகள், பாத்திரம், உணவுப் பொருட்கள், புத்தகம், கட்டில், பீரோ அனைத்தும் தீயில் கருகின. ஆசை ஆசையாய் தனது மகளின் திருமணத்திற்கு எடுத்து வைத்திருந்த 10 பவுன் நகை, பணம் தீயில் எரிந்து சாம்பலாயின. “வீடும் போச்சு, பிள்ளையும் போச்சே, கடவுளே நாங்கள் என்ன பாவம் செய்தோம் கடவுளே!” என்று ஸ்வதா பெற்றோர் கதறி அழுகிறார்கள்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தையல் குணாம்பட்டினம் காலனி.
வசிப்பவர் :
குடும்பத்தலைவர் ரவி, மனைவி சந்திரா, ஒரே மகள் ஸ்வதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மகன் நித்திஷ் கொண்ட ஒரு சிறிய குடும்பம். சலவைத் தொழிலாளி குடும்பம் .

‪#‎சம்பவம்‬ :
29-05-2016 காலையில் வெள்ளியன்று 11 மணியளவில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள வீட்டில் ஸ்வதா மட்டும் இருந்த வேளையில் அந்த பகுதியை சேர்த்த அதிமுகவினர் :
1) மணிகண்டன் (திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர்)
2)செல்வகுமார் (திருமணமாகி 2 பெண்குழந்தைகள் உள்ளனர்)
3) வைரமுத்து ஆகிய மூவரும் ‪#‎tasmac‬ குடிவெறி தலைக்கேற மாணவியிடம் பாலியல் வெறி கொடுமைகளை அரங்கேற்ற ஸ்வதா சப்தம் வெளியில் கேட்காமலிருக்க வாயைப் பொத்தி கழுத்தை இருக்கவே மயங்கி சரிந்தார் சிறுமி ஸ்வதா. அலறல் கேட்டு ஓடி வந்த பொதுமக்களிடம் ஒன்றுமே நடக்காதது போல நாடகமாடினார்கள் அ.தி.மு.க கட்சியினர் . சற்று நேரத்தில் 100 நாட்கள் வேலைக்கு சென்ற பெற்றோர் தகவல் கேட்டு அலறி ஓடி வந்தனர், மகளின் நிலை கண்டு பதறினார்கள்.
சம்பவத்திற்கு பின்னர் :
குறிஞ்சிப்பாடி அரசு பொதுமருத்துவமனையில் ஸ்வதா அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து கடலூர் மாவட்ட தலைமை அரசு பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கும் நிலைமை சரியில்லாததால் தற்போது புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு நடந்த சம்பவத்திலிருந்து மீளமுடியாமல், சுயநினைவிழந்து, குரல்வளை நெறிக்கப்பட்டு, மூளைக்குச் செல்லும் நரம்பு தடைப்பட்டு உயிருக்குப் ஸ்வதா போராடி வருகிறார்.
‪#‎ADMK‬ via Govt officials negotiation படலம் :
ஸ்வதா தந்தை ரவி அ.தி.மு.க கிரிமினல்கள் மீது புகார் கொடுக்கச் சென்றபோது அலைக்கழித்து திரும்பி அனுப்பியது குறிஞ்சிப்பாடி போலீஸ். புகாரை வாங்காமல் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று முயற்சித்தனர். இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பினரும், ரவியின் உறவினரும், வழக்கறிஞருமான நெய்வேலி மணவாளன் ஆகியோர் போராடி புகார் மனு கொடுத்து வழக்கு பதிவு செய்தனர். இதனடிப்படையில் மணிகண்டன் என்பவனை மட்டும் கைது செய்தது போலீஸ். மற்ற இரு கிரிமினல்களையும் கைதுசெய்ய வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் போது அப்பகுதி அ.தி.மு.க பிரமுகர் பாஷங்கி நாயுடு மூலம் ரூ 5 லட்சம் வரை பேரம் பேசி பணியவைக்க முயற்சித்தனர். பெற்றோர் உறுதியாக இருந்ததால் தோற்று ஓடிப் போனார்கள்.
இச்சம்பவம் குறித்து குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. இதை பெற்றுக் கொண்டு எஃப்.ஐ.ஆர் போட்டுள்ள போலீஸ் வழக்கம் போல குற்றவாளிகளை தேடி வருவதாக புழுகிக் கொண்டு முன் ஜாமீன் எடுத்துக் கொளள வழிகாட்டியுள்ளது. வியாழனன்று மதியம் பெயருக்காக வி.ஏ.ஓ விசாரணை நடத்திச் சென்றுள்ளார். இதுவரையில் ஆர்.டி.ஓ, டி.எஸ்.பி என்று எந்த உயரதிகாரிகளும் விசாரணைக்கு வரவில்லை.
இந்நிலையில் புதன்கிழமை இரவு 12 மணிக்கு in order to destory evidence ஸ்வதா வீட்டை தீ வைத்துக் கொளுத்தினார்கள் அ.தி.மு.க குண்டர்கள். வீட்டிலிருந்து துணிமணிகள், பாத்திரம், உணவுப் பொருட்கள், புத்தகம், கட்டில், பீரோ அனைத்தும் தீயில் கருகின. ஆசை ஆசையாய் தனது மகளின் திருமணத்திற்கு எடுத்து வைத்திருந்த 10 பவுன் நகை, பணம் தீயில் எரிந்து சாம்பலாயின. “வீடும் போச்சு, பிள்ளையும் போச்சே, கடவுளே நாங்கள் என்ன பாவம் செய்தோம் கடவுளே!” என்று ஸ்வதா பெற்றோர் கதறி அழுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக