ஞாயிறு, 5 ஜூன், 2016

மதுராவில் கலவரம் கொலை ! மதுரா எம்பி ஹேமமாலினி திரைப்பட ட்விட்டரில் ! வறுத்து எடுத்த வலைத்தளங்கள்...

சரமாரி விமர்சனங்களால் மதுராவுக்கு ஓடிவந்த ஹேமா
மதுரா: மதுராவில் நடந்த மோதலின் போது, சமூக வலைதளங்களில், தனது புதிய திரைப் படத்தின் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியதை அடுத்து, அந்த தொகுதியின் பா.ஜ., - எம்.பி., ஹேமமாலினி, நேற்று, அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார்.
சட்டவிரோத குடியிருப்புஉத்தரப் பிரதேச மாநிலத்தில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, மதுராவில் ஜவஹர்பாக் பகுதியில் சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றும் போதுநடந்த மோதலில், இரண்டு போலீஸ் அதிகாரிகள் உட்பட, 24 பேர் கொல்லப்பட்டனர்; 124 பேர் கைது செய்யப்பட்டனர்.


இச்சம்பவம் நடந்தபோது, மதுரா தொகுதியின், எம்.பி.,யும், நடிகையுமான ஹேமமாலினி, தன் புதிய திரைப்படத்தின் புகைப்படங்களை சமூக ,
வலைதளமான டுவிட்டரில் வெளியிட்டார். இதனையடுத்து அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.

கட்சி மேலிடத்திடமிருந்தும், அவருக்கு கடும் நெருக்கடி எழுந்தது. பலமுனைகளில் இருந்தும் கண்டனங்கள் எழுந்ததால், கலக்கம் அடைந்த ஹேமமாலினி, நேற்று முன்தினம் இரவு, மதுராவிற்கு வந்தார். மோதலில் காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீசாரை பார்த்து உடல்நலம் விசாரித்தார்.

திட்டம் இல்லைஆனாலும், கலவரம் நடந்த பகுதிக்கு அவர் செல்ல முற்பட்ட போது, போலீசார், அவரைதடுத்து நிறுத்தினர். நேற்று அங்கு, பா.ஜ., சார்பில், போராட்டம் நடந்தது. இதில், ஹேமமாலினி கலந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

உத்தர பிரதேச அரசு, சட்டம் - ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்த போலீசார், அதற்கான உத்தரவைபெறவில்லை. இந்த விஷயத்தை சரியானமுறையில் கையாள, உ.பி., மாநில அரசுக்கு தெரியவில்லை. வன்முறையில் ஈடுபட்டவர்களின் பின்னணி, எதிர்கொள்ள சரியான திட்டம் என, எதுவுமே இல்லாமல் செயல்பட்டுள்ளனர். இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; இது, மாநில அரசு தொடர்புடைய பிரச்னை. என்னை ஏன் விமர்சிக்கின்றனர் என தெரியவில்லை. இவ்வாறு கூறினார்.

முக்கிய குற்றவாளி பலி?: வன்முறை நடந்த போது, அந்த கும்பலுக்கு தலைமையேற்று நடத்தியவர், ராம் விரிக்ஷா யாதவ், 60 என கூறப்படுகிறது. கலவரத்தில், அந்த நபரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், போலீசார், இதனை உறுதிப்படுத்த வில்லை.

தனி நிர்வாகம்!:மதுராவில், சட்டவிரோதமாக குடியிருந்தவர்கள், அந்த பகுதிக்குள் தனி நிர்வா கம் நடத்தியது தெரியவந்துள்ளது. குற்றங்கள் குறித்து விசாரிக்க, தனி கோர்ட், தண்டனை பெற்றவர்களை தண்டிக்க சிறை, என, போட்டி அரசாங்கத்தையே நடத்தியு ள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக