செவ்வாய், 28 ஜூன், 2016

சுவாதி :என்னோட அப்பா அம்மாவே என்னை நம்பாதப்போ நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம்”

மொதல்ல நீங்க எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க, என்னோட லைஃப் போனதுக்கு அப்புறம் நான் வாழ்ந்து என்ன பண்ணப் போறேன். எனக்கு வாழப் புடிக்கல்ல, என்னோட அப்பா அம்மாவே என்னை நம்பாதப்போ நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம், அவங்களே என்னைப் பற்றி கேவலமா பேசுறாங்க, சத்தியமா சொல்றேன் நான் என் போட்டோவை யாருக்கும் அனுப்பல, நான் எந்த தப்பும் பண்ணல்ல.”தனது இறுதிக் கடிதத்தில் வினுப்ரியா எழுதியவை… சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வினுப்பிரியா என்ற இளம்பெண், மர்ம நபர்கள் சிலர் தன்னுடைய படத்தை ஆபாசமாக ‘மார்ஃபிங்’ செய்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளதாக கூறி கடந்த 23-ஆம் தேதி காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு படத்தை பதிவேற்றியிருக்கிறார்கள். இந்நிலையில்  இன்று வினுப்பிரியா தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.< தனது தற்கொலைக்கு முன் எழுதி வைத்துள்ள கடிதமே மேலே படித்தது. இந்தத் தற்கொலைக் காரணம் வக்கிரபுத்தியுடன் வினுப்ரியாவின் படத்தை பதிவேற்றியவர்களா? புகார் அளித்தும் விரைந்து நடவடிக்கை எடுக்காத காவல் துறையா? தனது மகளையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய பெற்றோரா? அல்லது பாதிக்கப்பட்ட வினுப்ரியாதான் எல்லாவற்றுக்கும் காரணமா?   thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக