புதன், 22 ஜூன், 2016

சுப்பிரமணியம் சாமி நிதி அமைச்சர்? அரசியலில் சு.சாமி, வைகோ,பாண்டியன் வகை விபச்சாரிகளுக்கு பணம் பதவிகளுக்கு பஞ்சமில்லை

சுப்பிரமணியன் சாமியின் உண்மையான இலக்கு அருண் ஜெட்லிதானே தவிர மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் இல்லை என்று திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்று பா.ஜ.க. எம்.பி.யான சுப்பிரமணியசாமி சமீபத்தில் போர்க்கொடி தூக்கினார். ரகுராம்ராஜன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், எனவே அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதையடுத்து மீண்டும் பதவி நீட்டிப்பு பெற விரும்பவில்லை என்று ரகுராம்ராஜன் அறிவித்தார்.தற்போது மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியனை பதவியில் இருந்து உடனே நீக்க வேண்டும் என்று சுப்பிரமணியசாமி போர்க்கொடி தூக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.


அதில், “இந்தியாவுக்கு எதிராக செயல்படும்படி 13-3-13 அன்று அமெரிக்காவிடம் கூறியது யார்? சுப்பிரமணியன்தான். அவரை உடனே பதவி நீக்கம் செய்யுங்கள். அவர் கிரீன் கார்டு வைத்திருக்கிறார். ஆனால் இந்திய குடிமகனா என்று தெரியவில்லை” என்று சுப்பிரமணியசாமி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக் விஜய்சிங் கூறுகையில், “சுப்பிரமணியசாமியின் இலக்கு அரவிந்த் சுப்பிரமணியன் அல்ல. நிதி மந்திரி அருண் ஜெட்லியை குறி வைத்தே இப்படி தகவல் வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடி, மத்திய நிதி மந்திரி பொறுப்பை சுப்பிரமணியன் சாமியிடம் கொடுக்க போகிறாரா? நேரு, காந்தி குடும்பத்தினரை தொடர்ந்து குறிவைத்து தாக்கினால் அவருக்கு நல்ல பதவியை கொடுப்பதாக மோடி தன்னிடம் கூறியிருப்பதாக சுப்பிரமணியன் சாமி கூறிவருகிறார்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரவிந்த் சுப்பிரமணியன் மீதான சாமியின் விமர்சனம் அவரது சொந்த கருத்து என்று பா.ஜ.க. கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக