வெள்ளி, 10 ஜூன், 2016

பொன்.ராதாக்கிருஷ்ணன் வெளியேறுகிறாரா? நிச்சயமா என்னவோ நடக்கிறது.

நாகர்கோவில்: குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைவதற்கு இடையூறு ஏற்பட்டால் மத்திய இணை அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்வேன் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது: குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைய வேண்டும் என்பது இம்மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கனவு. மத்தியில் ஆளும் பாஜக அரசு இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.23 ஆயிரம் கோடி பணம் ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்தபோதும் பொன்னார் தனி ஆவர்த்தனம் நடத்தி வருவது குறித்து தொடர்ச்சியாக புகார்கள் மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறதாம்.
அண்மையில் ஒருபொதுக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் பெயரைக் கூட பொன். ராதாகிருஷ்ணன் உச்சரிக்கவில்லை என்பது சர்ச்சையானது.  பாஜகவின் தமிழக கிளையாக அதிமுகவே போதும்? ஜெயாவின் கண்டிசனுக்கு மோடி ஆமா ஆமா ஆமா? 


சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றிரண்டு தொகுதிகளையாவது பாஜக கைப்பற்றும் என்றே டெல்லி மேலிடம் பெரிதும் எதிர்பார்த்ததாம். ஆனால் பாஜகவினருடன் நெருக்கமாக இல்லாமல் பொன். ராதாகிருஷ்ணன் தனித்து செயல்படப் போய் தோல்வியைத்தான் தழுவ நேரிட்டது; அவர் மட்டும் பாஜகவினருடன் நெருக்கமாக இருந்து தேர்தல் பணியாற்றி இருந்தால் குறைந்தது 3 தொகுதிகளிலாவது வென்றிருக்க முடியும் என்பது தமிழக பாஜக தலைவர்களின் கருத்து.

 இதை அப்படியே டெல்லி மேலிடத்துக்கும் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். அண்மையில் நாகர்கோவிலுக்கு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வந்தபோது கூட்டமே இல்லை என கடிந்து கொண்டாராம்... ஆனால் பொன். ராதாகிருஷ்ணனோ இதைப்பற்றி எந்த கவலையுமே படவில்லையாம். இப்படி தனி கச்சேரி நடத்தி வருவதால் அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது அவரை கழற்றிவிட பிரதமர் மோடியும் பாஜகவும் முடிவு செய்திருக்கிறது என்கின்றன டெல்லி தகவல்கள்.
இதனை உணர்ந்துதான் குளச்சல் துறைமுகம் திட்டத்தை முன்வைத்து தாம் ராஜினாமா செய்யப் போகிறேன் என மறைமுகமாக கட்சி மேலிடத்துக்கு மிரட்டல் விடுத்து வருகிறாராம் பொன். ராதாகிருஷ்ணன். நடக்கட்டும்! நடக்கட்டும்!!

Read more at:tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக