திங்கள், 20 ஜூன், 2016

நடிகர் பாண்டியராஜனின் மகன் அனுமதியின்றி குட்டி விமானம்.. போலீஸ் விசாரணை

ஜூன் 20:அனுமதியின்றி ஆளில்லா குட்டி விமானத்தை இயக்கிய நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரேமராஜனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். . தி.நகர் பகுதியில் நடிகர் பாண்டியராஜன் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பிருத்வி நடிகராக உள்ளார். இளைய மகன் பிரேமராஜன் (வயது 23). இவர் தனது நண்பர்களுடன் மயிலாப்பூர் சிஐடி நகர் அருகே உள்ள வேலஸ் கார்டன் பகுதியில் நேற்றிரவு 11.30 மணியளவில் ஆளில்லாத குட்டி விமானத்தை பறக்க விட்டுள்ளார். அந்த சத்தத்தை கேட்டு அருகிலிருப்பவர்கள் மயிலாப்பூர் போலீசாருக்கு புகார் கொடுத்தனர்.
அங்கு விரைந்து வந்த ரோந்து போலீசார் அந்த குட்டி விமானத்தை பறிமுதல் செய்ததுடன், உரிய அனுமதியில்லாமல் குட்டி விமானத்தை இயக்கிய நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரேமராஜனை இன்று காலை விசாரணைக்கு வரும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். அதன் படி இன்று காலை மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு வந்த பிரேமராஜனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மாலைசுடர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக