ஞாயிறு, 12 ஜூன், 2016

மத்திய அரசு பணியில் ஆர் எஸ் எஸ் ! வீரமணி கடும் கண்டனம்

கி.வீரமணி | கோப்புப் படம்: க.ஸ்ரீபரத் மத்திய அரசு பணிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை சேர்க்கும் முடிவு சரியல்ல என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ளவர்கள் மத்திய அரசு பணிகளில் சேரலாம் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என்ற செய்தி அபாயகரமானது. இதன் மூலம், சிறுபான்மையினரும், மதச் சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்களும் ஒவ்வொரு நொடியையும் அமைதியற்ற முறையில் கழிக்க வேண்டும் என்ற நிலைக்கு கத்தியைத் தீட்டிவிட்டார்கள் என்று தெரிகிறது.

மகாத்மா காந்தியின் கொலைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உறுப்பினருக்கு அரசுப் பதவிகள் வழங்கப்படமாட்டாது என்று மத்திய அரசு உறுதி எடுத்தது. அதன்படி, மத்திய அரசுப் பணியாளர் பதவி உறுதிமொழி ஆவணங்களில் ‘நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவனல்லன்’ என்று எழுதப்பட்ட விதிமுறைப் படிவத்தில் கையொப்பமிட வேண்டும். இது கடந்த 60 ஆண்டுகாலமாக நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், திடீரென்று பிரதமர் அலுவலகம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினராக இருந்தாலும் பரவாயில்லை. அவர்களுக்கு மத்திய அரசுப்பணிகளை வழங்கலாம் என்றும், இதற்கு முன்பிருந்த தடையாணையை திரும்பப் பெறவும் முடிவெடுத்துள்ளது. எனவே, மதச் சார்பற்ற சக்திகள் ஒன்று திரண்டு இந்துத்துவ சக்திகளை முறியடிக்க முன்வர வேண்டும்'' என்று வீரமணி கூறியுள்ளார்.    கி.வீரமணி | கோப்புப் படம்: க.ஸ்ரீபரத்  tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக