வியாழன், 9 ஜூன், 2016

அம்மா தாயே....கருணாநிதி ஒழிக ... தர்மம் பண்ணுங்க தாயே !

ஜெயலலிதாவிடம் இருந்து பிச்சை எடுக்க ஒரே வழி  "கருணாநிதி ஒழிக"
கேள்வி :- ஈழக்கருமாதி புகழ் வசூல் ராஜா திருமுருகன் காந்தி நடத்திய செல்ஃபி மெழுகுவர்த்தி கூட்டத்தில், கலைஞரை ஈழப்படுகொலையாளர் என்று படம் போட்டு காட்டினார்களமே?
பதில் :- ஒரு கதை சொல்றேன். வீடு புகுந்து கொலை,கொள்ளை கற்பழிப்பு செய்யும் மகா கொடூர திருடனை மக்களும் போலிசாரும் ஒருநாள் கண்டுபிடித்து துரத்தினார்களாம். அனைவரும் நெருங்குகையில், கருணாநிதி ஒழிக, ஈழப்படுகொலையாளி கருணாநிதி ஒழிக, இனப்படுகொலையாளி கருணாநிதி ஒழிக தொடர்ந்து கத்தினானாம். போலிசாரும் மக்களும் அடடே, இந்த மகா திருடன் மிக மிக நல்லவன் போலவே என்று அவனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு, உண்மையான தமிழ்த்தேசியருடன் ஒரு தருணம் என்று பேஸ்புக்கில் போட்டுக்கொண்டனராம். இந்தக்கதை மாதிரிதான் தமிழ்நாஜியத்தில் பங்குனிகள், மங்குனிகள் மக்களைக் கொண்டு நடத்துகின்றனர். டான் அசோக் சொன்னதைப்போல ஜெ.விடம் இருந்து அயோக்கியர்கள் தப்பிக்க எடுக்க ஒரே ஆயுதம் "கருணாநிதி ஒழிக". இந்த அயோக்கியர்களை அடையாளம் கண்டு, ஜெ.வையும் மக்களையும் ஏமாற்றும் இவர்களை சந்திக்க சிரிக்க வைப்பது அதிமுக சார்பு நடுநிலையாளர்களின் பொறுப்பு. நானே எவ்வளவு நாள்தான் தண்டோரா போடுவது.-  நெடிசன் கிளிமூக்கு அரக்கன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக