ஞாயிறு, 19 ஜூன், 2016

லண்டனில் விஜய மல்லியாவுடன் இந்திய தூதர் விருந்து... 9000 கோடிக்கு ஆட்டைய போட்டவன் ஜாலி

விஜய் மல்லையா, இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, திருப்பி தராமல் மோசடி செய்தார். மேலும் லண்டனுக்கு தப்பிச் சென்று அங்கேயே தங்கியுள்ளார். தன் மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளையும் அவர் சந்திக்க மறுத்து விட்டார். இதனால் அவர் மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் போன்றவை வழக்குப்பதிவு செய்துள்ளன. அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பல்வேறு பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அவரை இந்தியாவிற்கு அனுப்ப இங்கிலாந்து அரசும் ஏற்க மறுத்துவிட்டது. 100 ரூபாய் லஞ்சம் வாங்கிய  ஒரு தாசில்தாருக்கு மூன்று வருடம் சிறை .. மல்லியாவுக்கு விருந்து


சமீபத்தில், இந்தியாவில் உள்ள அவரின் ரூ.1411 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாகக்த்துறை முடக்கியது. இந்நிலையில், பண மோசடி விவகாரத்தில் மத்திய அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்று, விஜய் மல்லையாவை அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்று பணமோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.


இந்நிலையில் லண்டனில் உள்ள பொருளாதார பள்ளி ஒன்றில் நடைபெற்ற எழுத்தாளர் சூகேல் சேத் எழுதிய வெற்றிக்கான சூத்திரம் என்ற புத்தக வெளியிட்டு விழாவில் விஜய் மல்லையா கலந்து கொண்டார்.   இந்த விழாவில் பிரிட்டனுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னாவும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் மல்லையா புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டது சேத் கூறுகையில், யாருக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கவில்லை எனவும், விஜய் மல்லையா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதை கவனித்த இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா உடனடியாக அங்கிருந்து சென்றார் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக