புதன், 1 ஜூன், 2016

87 votes Versus 570 Crores ? திருமாவளவனின் கோரிக்கையை லக்கானி நிராகரித்தார்... காட்டுமன்னார் கோவில் வாக்குகளை மீண்டும் எண்ணமுடியாது!

சென்னை: காட்டுமன்னார் கோவில் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மீண்டும் அந்தத் தொகுதியின் வாக்குகளை எண்ண வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நிராகரித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.  வெறும் 87 ஓட்டுகள்தான் என்று சொல்லாதே அதன் ஸ்ட்ரீட் வல்யு  570 கோயும் 3  காண்டேயினர்களும்  என்பதை மறவாதே 
இது தொடர்பாக அவர்,'வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு காரணமாகவும், வாக்குச்சாவடி எண் 81ல் முறையாக வாக்குப்பதிவு நடக்கததாலும் தாம் தோல்வியுற்றதாகவும், எனவே ஒரு வார்டில் மறுவாக்குப்பதிவு மற்றும் அத்தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்தார்.
திருமாவளவனின் கோரிக்கையை தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நிராகரித்து விட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய ராஜேஷ் லக்கானி, "வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற பிறகு, அதில் மற்ற வேட்பாளர்களுக்கு அதிருப்தி மற்றும் ஆட்சேபம் இருந்தால், நீதிமன்றம் மூலமே மட்டுமே தீர்வுகாண முடியும்" என்று கூறியுள்ளார்.

Read more at: ://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக