திங்கள், 13 ஜூன், 2016

அமெரிக்க விடுதியில் பேர் 50 சுட்டு கொலை .. இஸ்லாமிய பயங்கரவாதி உமர் மைதீன் ஆப்கான் வம்சாவளி

Nightclub Shooting Florida"It has been reported that Omar Mateen made calls to 911 this morning in which he stated his allegiance to the leader of the Islamic State," said Hopper, the FBI's assistant special agent in charge on the case.
Omar Mateen opened fire inside the crowded gay nightclub in Orlando, Fla., killing 50 people before dying in a gunfight with SWAT officers, police said. (Associated Press)
வாஷிங்டன், அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் 50 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த வாலிபர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக தகவல்கள் கூறுகின்றன. துப்பாக்கிச்சூடு அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில் ‘பல்ஸ்’ என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி செயல்பட்டு வந்தது. அந்த விடுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கேளிக்கை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த வாலிபர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கு வந்திருந்தவர்கள் உயிர் பிழைப்பதற்காக அலறியவாறு அங்குமிங்கும் ஓடினர். சிலர் கழிவறைகளுக்குள் புகுந்து மறைந்து கொண்டனர். இன்னும் சிலர் வெளியே ஓட்டம் பிடித்தனர்.


முதல் கட்ட தகவல்

இருப்பினும் ஏராளமானவர்கள் குண்டுபாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

தகவல் அறிந்த போலீஸ் படையினர் விரைந்து வந்து, துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்து விட்டதாகவும், 40-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், இந்த தாக்குதலில் போராளி குழுக்களின் கைவரிசை சந்தேகிக்கப்படுவதாகவும் ஆர்லண்டோ போலீஸ் வட்டாரங்கள் முதலில் தெரிவித்தன.

50 பேர் பலி

ஆனால் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது 50 பேர் கொல்லப்பட்டதாகவும், 53 பேர் படுகாயம் அடைந்ததாகவும் ஆர்லண்டோ நகர மேயர் புட்டி டயர் பின்னர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக எப்.பி.ஐ. என்னும் மத்திய புலனாய்வு படை செய்தி தொடர்பாளர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “இந்த துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், போராளி குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். ஐ.எஸ். இயக்கத்துடன்கூட தொடர்பில் இருந்திருக்கலாம்” என கூறினார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறைந்தது 15, 20 நிமிடங்கள் நடந்திருக்கலாம் என நேரில் கண்டவர்கள் கூறினர். ‘பேஸ் புக்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் தகவல்கள் காட்டுத்தீ போல பரவின.

பணயக்கைதிகள் மீட்பு

சம்பவத்தின்போது இரவு விடுதிக்குள் இருந்த ரிச்சர்டு நெக்ரோனி என்பவர், “துப்பாக்கிக்சூடு சத்தம் கேட்டதுதான் தாமதம், பலர் ஓட்டம் பிடித்தனர். இன்னும் பலர் தரையில் குப்புற படுத்துக்கொண்டனர். நானும் அப்படித்தான் படுத்துக்கொண்டேன். என் மீது மற்றொருவர் படுத்திருந்ததை கண்டேன். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் எத்தனை பேர் என்பதை நான் பார்க்கவில்லை” என கூறினார்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது, அங்கிருந்த சிலர் பணயக்கைதிகளாகவும் பிடிக்கப்பட்டனர். ஆனால் வெடிமருந்துகள் மற்றும் கவச வாகனத்தை பயன்படுத்தி அந்த இரவு விடுதியின் சுவரை உடைத்து அவர்களை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

அந்த நகர போலீஸ் அதிகாரி ஜான் மினா, “நன்கு அமைப்புரீதியில் திட்டமிட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது” என கூறினார்.

ஆப்கானிஸ்தான் வம்சாவளி

இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய வாலிபர் உமர் மாதீன்; இவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெற்றோருக்கு 1986-ம் ஆண்டு பிறந்தவர், புளோரிடா மாகாணத்தின் போர்ட் செயின்ட் லூசி நகரில் வசித்து வந்தவர் என தகவல்கள் கூறுகின்றன. இவருக்கு போராளிகள் குழுக்களுடன் தொடர்பு எதுவும் இருந்ததா என்பது பற்றி விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பெருகி வருவது மக்களை பதற்றத்தில் ஆழ்த்தி உள்ளது.  dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக