புதன், 1 ஜூன், 2016

சிலைகள் கடத்தல்...நடிகை சிக்கினார்.... 50 கோடி... சர்வதேச கடத்தல்காரன் தப்பிவிட்டான்?

Some of the stolen artefacts seized after a raid in Chennai. Photo: R. Ragu
 சென்னை : சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ் சந்திர கபூரின் நெருங்கிய கூட்டாளியின் சென்னை வீட்டில், 50 கோடி ரூபாய் மதிப்புள்ள, 55 சுவாமி சிலைகளை போலீசார் நேற்று மீட்டனர்; இது தொடர்பாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவன் தீனதயாள், 68. சென்னை, ஆழ்வார்பேட்டை, முரேஷ் கேட் சாலையில், இரண்டு மாடிகள் உடைய வீட்டில் வசித்து வந்தான். வீட்டின் தரை தளத்தில், அவன், பழங்கால கலைப்பொருட்கள் விற்பனை செய்யும், 'ஆர்ட் கேலரி'யை நடத்தி வந்தான்.
ஐம்பொன் மற்றும் கற்களால் செய்யப்பட்ட, பழங்கால சுவாமி சிலைகளை, மும்பை வழியாக, வெளிநாடுகளுக்கு அவன் கடத்தி வருவதாக, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., சுந்தரம் தலைமையிலான போலீசார், நேற்று அதிகாலை, தீனதயாளின் சென்னை வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பார்சல் செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த, 50 கோடி ரூபாய் மதிப்புள்ள, 55 பழங்கால சுவாமி கற்சிலைகளை மீட்டனர்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:தீனதயாள், 1965ல் இருந்து, சுவாமி சிலை கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகிறான். அவனுக்கு, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் பெங்களூரில் வசிக்கிறார்; மகன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளான்.
பெரும் கோடீஸ்வரரான தீனதயாள், சென்னை, தேனாம்பேட்டையில், தன் மனைவி பெயரில், 'அபர்ணா ஆர்ட் கேலரி' என்ற பழங்கால கலைப்பொருட்கள் விற்பனை கூடம் நடத்தி வந்தான். அதேபோல், சென்னை, ஆழ்வார்பேட்டை, சித்ரஞ்சன் சாலையிலும், 'ஆர்ட் கேலரி' நடத்தி வந்தான். பழங்கால சுவாமி சிலைகளை கடத்துவதே இவனது பிரதான தொழில்.
அதற்காக, தமிழகம் முழுவதும் சிலைகளை திருடி வர ஆட்களை நியமித்துள்ளான். அவர்களிடம் குறைந்த விலைக்கு சிலைகளை வாங்கி, அதிக விலைக்கு கைமாற்றி விடுவதில் பெரிய கில்லாடி.
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள கோவிலில் சிலைகள் திருடிய வழக்கில், 2005ல் கைதாகி உள்ளான். ஜாமினில் வெளிவந்த பின், சென்னையில் உள்ள, 'ஆர்ட் கேலரி'யை மூடிவிட்டு, ஆந்திராவுக்கு சென்று விட்டான்.
அங்கு இருந்து, மும்பை வழியாக, வெளிநாடுகளுக்கு சிலைகளை கடத்த முயன்றுள்ளான்; இந்த திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால், தாய்லாந்துக்கு தப்பிய அவன், மீண்டும் சென்னைக்கு வந்து சிலை கடத்தும் தொழிலில் ஈடுபட துவங்கி உள்ளான்.
தீனதயாள், சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ் சந்திர கபூரின் நெருங்கிய கூட்டாளி. இரண்டு பேருக்கும், அமெரிக்கா, ஜெர்மன், பிரிட்டன், ஆஸ்திரேலியா என, பல நாடுகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஏஜன்ட்கள் உள்ளனர். அவர்கள் மூலம், குழந்தை சம்பந்தர், தெய்வானை உள்ளிட்ட பல சிலைகளை கடத்தி உள்ளனர்.
சர்வதேச சந்தையில் விலை அதிகம் என்பதால், தஞ்சை, அரியலுார், ஜெயகொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, சோழர்கால சிலைகளை திருடி,
கடத்தி உள்ளனர்; கடத்தப்பட்டவை எத்தனை சிலைகள் என, கணக்கெடுத்து வருகிறோம்.கடந்த, 2008ல், சுபாஷ் சந்திர கபூர் கைதுக்கு பின், தீனதயாள், நியூயார்க்கில், தன் மகன் கிருதயாளை ஏஜன்டாக நியமித்து, அவன் மூலமாகவே சிலைகளை கடத்தி, வெளிநாடுகளில் விற்றுள்ளான்.
தற்போது அவனிடம் இருந்து, சிவலிங்கம், தட்சணாமூர்த்தி, ஆயிரம் கிலோ எடை உடைய விநாயகர் உட்பட, 55 பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், இந்த சிலைகள், 100 முதல 1,700 ஆண்டுகள் பழமையானவை என, கண்டறிந்துள்ளனர். தீனதயாள் பெங்களூருக்கு தப்பி விட்டான்.
அவனை சுற்றிவளைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அவன், ஒரு கோவிலில் உள்ள துாண், சிலை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் திருடி வந்து, பதுங்கி வைத்து இருந்தான்.
கருடாழ்வார் சிலையை கடத்த, பார்சல் செய்து கொண்டு இருந்த போது, தீனதயாளின் மேலாளர் மற்றும் உதவியாளர்கள், சென்னையைச் சேர்ந்த, ராஜாமணி, 60, குமார், 58, மான்சிங், 58, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.



அவன் தான் இவன்

கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில், பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மூலவர் சன்னிதிக்கு இடது புறத்தில் இருந்த அர்த்தநாரீஸ்வரர் கற்சிலை, திருடப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டது.
பிரதமர் மோடி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்ற போது, அந்நாட்டு பிரதமர் டோனி அபோட், அர்த்தநாரீஸ்வரர் மற்றும் நடராஜர் சிலைகளை மோடியிடம் ஒப்படைத்தார். தீனதயாளின் மேலாளரிடம் நடத்திய விசாரணையில், அர்த்தநாரீஸ்வரர் சிலையை, சுபாஷ் சந்திர கபூர் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு தீனதயாள் கடத்தியது தெரியவந்துள்ளது. தினமலர்.com

  • There is a thriving global market for Indian antiques. Photo: R. Ragu
    There is a thriving global market for Indian antiques. Photo: R. Ragu
  • Some of the stolen artefacts seized after a raid in Chennai. Photo: R. Ragu

Raid leads to seizure worth more than Rs. 50 crore

: Officers of the Idol Wing–CID attached to the Economic Offences Wing (EOW) claim to have unearthed yet another idol smuggling racket with the arrest of three persons who allegedly helped in hiding ‘antique’ stone idols in a house in Alwarpet on Tuesday.
The hunt is on for Deenadayalan, the kingpin who allegedly smuggled the idols to Mumbai. The gang is suspected to have had links with the infamous idol smuggler Subash Kapoor.
According to A.G. Pon Manickavel, Inspector General of Police (IG), Idol Wing, his team got a tip-off that some idols were stolen from temples in Tamil Nadu and were taken to Andhra Pradesh. They were again brought to the State to be smuggled to Mumbai. “They took the detour as we had intensified checking. Based on the tip-off, we tracked and nabbed three persons – Maan Singh (55), Kumar (60) and Rajamani (60). The three worked for Deenadayalan,” he said.
According to police sources, while Maan Singh was an employee and caretaker of the house shielding Deenadayalan, Kumar prepared false bills to make it appear as if the idols were made recently so that they could be shipped without any problem. Rajamani helped in packing the antiques.
After arresting the three, the idol wing team raided the house of Deenadayalan in Murrays Gate Road, Alwarpet and seized idols worth between Rs. 10 and Rs. 40 crore. The total value of idols seized could be above Rs. 50 core. Different stone idols ranging from a small Ganapathy to Dakshinamoorthy and pillars and vessels were found stocked in the house. “We had already seized an idol of Garudalwar and Boodevi and Sridevi. Basically, everything needed for a temple was found in the house. There were also some sculptures from Hoysala dynasty, the rest were mainly from the Chola period,” Mr. Pon Manickavel said.
Deenadayalan is said to be running an art gallery in Teynampet since 1995. “In 2002, he had smuggled across an Ardhanareeswarar idol and six other idols to a dealer in Mumbai and from there to the Art of the Past gallery in New York. From there, a few antiques were sent to galleries in Australia and New South Wales,” Mr. Pon Manickavel added.
The three arrested have been remanded to judicial custody.
The Subash Kapoor angle
Subash Kapoor, who is lodged in the Puzhal prison after being arrested by the Idol Wing on July 14, 2012 on his extradition from Germany, is considered the biggest smuggler of idols in recent times.
A person of Indian origin, he owned an import company and an art gallery called ‘Art of the Past’ in New York. He has been charged with smuggling antique idols from Varadaraja Perumal Temple at Suthamalli village and from temples in Ariyalur district.
“He is quite famous in the US. He used to give small idols free of cost to the dealers and ones with more antique value at a very high price,” said an officer attached to the idol wing.
Kapoor’s contacts spanned India, Pakistan, Dubai, Hong Kong, Afghanistan, Bangladesh, Indonesia, Cambodia and Bangkok. He used this network to ship and sell antique art works with fake documents. He used to visit Tamil Nadu whenever he came to India.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக