திங்கள், 13 ஜூன், 2016

ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்த 5 தனியார் ஆஸ்பத்திரிக்கு 700 கோடி அபராதம்

The five hospitals are – Max Super Speciality Hospital (Saket), Fortis Escorts Heart Institute, Shanti Mukand Hospital, Dharamshila Cancer Hospital and Pushpawati Singhania Reasearch institute. The notice was sent to these erring hospitals demanding an explanation for why they should not be fined for violating the regulations. None of them furnished the satisfactory replies and the fine amount was calculated as per the basis of an high court order passed in 2007 on a PIL on provision for free treatment of poor and action against culprit hospitals.

ஏழைகளுக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்க மறுத்த 5 தனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி அரசு ரூபாய் 700 கோடி அபராதம் விதித்துள்ளது. மானிய விலையில் ஒதுக்கீடு செய்யப்படும் இடத்தில் கட்டப்படும் மருத்துவமனைகளில் 10 சதவீத நோயாளிகளுக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற சட்ட விதிமுறை அமளில் உள்ளது. ஆனால் மருத்துவ மனைகள் இந்த விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பிவிடுகின்றன.
இந்த நிலையில் டெல்லி அரசு ஏழைகளுக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்க மறுத்த 5 தனியார் மருத்துவமனைகளுக்கு ரூபாய் 700 கோடி அபராதம் விதித்துள்ளது. இதுதொடர்பான நோட்டீஸை எதிர்த்து சம்மந்தப்பட்ட மருத்துவமனைகள் தொடர்ந்த வழக்கில், அரசின் உத்தரவு செல்லும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அபராதமாக வசூலிக்கப்படும் தொகை சுகாதாரத்துறைக்கு பயன்படுத்தப்படும் என்று டெல்லி அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்  மாலைமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக