வெள்ளி, 3 ஜூன், 2016

சிலைகள் கடத்தல் விசாரணை: ஆயிரம் ஆண்டுகள் பழமையான 42 ஓவியங்கள் கண்டுபிடிப்பு - சோழர் காலத்து

ஆழ்வார்பேட்டை பங்களா வீட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 42 ஓவியங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தெரிவித்து உள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலை அருகே முரேஸ்கேட் சாலையில் ஒரு பங்களா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 31-ம் தேதி சோதனை நடத்தி, கற்களில் செய்யப்பட்ட 54 பழங்கால சாமி சிலைகளை பறிமுதல் செய்தனர். சிலைகளை பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் தீனதயாள்(78) சோதனையின்போது வீட்டில் இல்லை. அங்கிருந்த அவரது கூட்டாளிகள் மான்சிங்(58), குமார்(58), ராஜாமணி(60) ஆகி யோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லும் ஏஜெண்டுகள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

பூட்டை உடைத்து சோதனை
அந்த பங்களா வீட்டில் 2 அறைகள் பூட்டப்பட்டு இருந்தன. இதனால் அந்த அறைகளில் சோதனை நடத்த எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் நேற்று காலையில் சோதனை நடத்தப்பட்டது. இதில், 'வெண்கலத்தில் செய்யப்பட்ட 34 சாமி சிலைகள், சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை யான 42 ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஓவியங்கள் கற்களில் வரையப்பட்டுள்ளன. அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு அறையில் மட்டுமே சோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மற்றொரு அறையில் நாளை(இன்று) சோதனை நடத்தப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
நாகசாமி தகவல்
தொல்லியல் நிபுணர் நாக சாமியை அழைத்து வந்து சிலைகளை போலீஸார் காண் பித்தனர்.
அவர் சிலைகளை ஆய்வு செய்த பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், "இந்த சிலைகள் அனைத்தும் தஞ்சாவூர் பாணியில் செய்யப்பட்டுள்ளன. சிவன் தொடர்பான சிலைகள் அதிகம் உள்ளன. இவை அனைத்து tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக