வியாழன், 30 ஜூன், 2016

ஏன் யாரும் காப்பாற்ற வரவில்லை? சுவாதி 2 மணிநேரம் ரெயில் நிலையத்திலேயே....ஏன் யாரும்?


இந்நிலையில் சென்னையில் சட்ட ஒழுங்கு, பெண்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் சுவாதி கொலை செய்யப்பட்ட பின்னர் யாரும் அவருக்கு உதவ முன்வராதது குறித்து விவாதித்து வருகின்றனர்.சுவாதி படுகொலை செய்யப்பட்டு 2 மணி நேரம் ரயில் நடைபாதையிலே கிடந்துள்ளார். அவருக்கு உதவவோ, கொலை செய்தவனை பிடிக்கவோ, சுவாதியை மருத்துவமனையில் சேர்க்கவோ யாரும் முன்வரவில்லை.
அனைவருக்கும் ஒரு காட்சி பொருளாக மாறிய சுவாதியின் படுகொலை மிகவும் கண்டிக்கத்தக்கது என பலர் கூறிவருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இளம்பெண்களிடம் கருத்துக்கள் கேட்க்கப்பட்டது.அதற்கு பதில் அளித்த அவர்கள் ஆவேசமாக பொங்கி எழுந்து தங்கள் கோபத்தை கொட்டித்தீர்த்துள்ளனர். சமூகத்தின் மீதும், ஆண்கள் மீதும் உள்ள கோபத்தை அந்த பெண்கள் இந்த வீடியோவில் வெளிப்படுத்தியுள்ளனர்.>மேலும் சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக இல்லை என பெரும்பாலானோர் கூறியுள்ளனர். ஒரு சிலர் மட்டுமே மற்ற நகரங்களை ஒப்பிடும்போது சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்றனர். வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக