வியாழன், 9 ஜூன், 2016

23 ஆம் அதிகாரி ராம் மோகன் ராவ்....22 பேரை முந்திக்கொண்டு வந்த தலைமை செயலர்.... கமிஷன்,கலெக்ஷன் கண்காணிப்பு....

மூத்த அதிகாரிகள் 22 பேரை விலக்கிவிட்டு இராமமோகன் ராவை தலைமைச் செயலராக நியமிக்கும் அளவுக்கு அவருக்கு சிறப்புத் தகுதி ஏதேனும் உள்ளதா? என்று கேட்டால், இல்லை என்பது தான் தமிழக அரசியல் நிலவரம் அறிந்த அனைவரின் பதிலாக இருக்கும். ஆனால், மூத்த அதிகாரிகளுக்கு இல்லாத சில சிறப்புத் தகுதிகள் இராம மோகன் ராவுக்கு உள்ளன. ஆட்சியாளர்களின் ஊழல்களுக்கு உதவியாக இருப்பார், அதிகாரத் தரகராக இருப்பார், அமைச்சர்கள் எந்தெந்த பணிகளுக்காக யாரிடம் பேரம் பேசுகின்றனர் & அதற்காக எவ்வளவு தொகை கைமாறுகிறது என்பன உள்ளிட்ட விவரங்களை சேகரித்து முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தெரிவிப்பது ஆகியவை தான் அவருக்கு உள்ள தகுதிகளாகும். கடந்த 5 ஆண்டுகள் முதலமைச்சரின் செயலாளராக பணியாற்றிய போது தமது திறமைகளை அவர் சிறப்பாக வெளிப்படுத்தியதற்கான பரிசு தான் இப்பதவி என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக