ஞாயிறு, 19 ஜூன், 2016

கர்நாடகாவில் 14 அமைச்சர்கள் பதவி நீக்கம்.. புதிய இளையவர்களுக்கு வாய்ப்பு

பெங்களூர்: கர்நாடகவில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வருடனும், சித்தராமையாவுடனும் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினர். அப்போது தேர்தலுக்கு முன்பாக அமைச்சரவையிலும், கட்சியிலும் பல முக்கிய மாற்றங்களை செய்யுமாறு சோனியா உத்தர விட்டதாக தெரிவித்தனர். இதன்படி ஊழல் புகாரில் சிக்கியவர்கள், கட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்தியவர்கள் 14 அமைச்சர்களை நீக்கி விட்டு இளையவர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து காங்கிரஸ் ஆளும் கார்நாடகா அமைச்சரவையில் முதல்வர் சித்தராமையாக அதிரடி மற்றங்களை மேற்கொண்டுள்ளார்.
இன்று அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 14 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக 13 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். முதல்வர் சித்தராமையாக மேற்கொண்ட மாற்றங்களுக்கு கட்சியின் மேலிடத்தில் இருந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தன்வீர் சேட், காகோடூ திம்பப்பா, ரமேஷ் குமார், பாசாவராஜ் ராயன் ரெட்டி, எச்.ஒய்.மீடி, எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன, எம்.ஆர். சீத்தாராம், சந்தோஷ் லாட் மற்றும் ரமேஷ் ஜார்கோலி ஆகியோர் காபினெட் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பிரியங் கார்கே, ருத்ரப்பா லாமணி, ஈஸ்வர் காந்த்ரே மற்றும் பிரமோத் மாதவரா ஆகியோர் இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சர்களுக்கு ராஜ் பவனில் நடைப்பெற்ற விழாவில் ஆளுநர் வாஜ்பாய் வாலா பதவிப்பிரமானம் செய்துவைக்கவுள்ளார்  dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக