சென்னை: ஐபிஎல் சூதாட்டத்தை விஞ்சும் வகையில் தமிழக சட்டசபை தேர்தலை
முன் வைத்து பல கோடி மதிப்புக்கு தமிழகத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக தகவல்
வெளியாகியுள்ளது. இந்த சூதாட்ட நெட்வொர்க், வேட்பாளர்களின் மற்றும்
கட்சிகளின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் சக்தியாக மாறி வரும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் சூதாட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை காண தமிழக ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. டிவி டி.ஆர்.பி குறைந்துவிட்டது.
மேலும், சென்னை அணி இடம்பெறாமல் போனதால், சூதாட்டத்திற்கு தமிழகத்தில் களம் கிடைக்காமல், சூதாடிகளும், புக்கிகளும், அவர்களை ஆட்டுவிக்கும் பெட்டிங் கம்பெனிகளும் கையை பிசைந்து கொண்டிருந்தனர்
ஐபிஎல் சூதாட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை காண தமிழக ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. டிவி டி.ஆர்.பி குறைந்துவிட்டது.
மேலும், சென்னை அணி இடம்பெறாமல் போனதால், சூதாட்டத்திற்கு தமிழகத்தில் களம் கிடைக்காமல், சூதாடிகளும், புக்கிகளும், அவர்களை ஆட்டுவிக்கும் பெட்டிங் கம்பெனிகளும் கையை பிசைந்து கொண்டிருந்தனர்
களமிறக்கம்
இந்த நிலையில்தான், தமிழக சட்டமன்றத் தேர்தலை தங்களுக்கு ஆதாயம் தரும்
வியாபாரமாக மாற்ற சூதாட்ட தரகர்கள் முடிவு செய்து களத்தில் குதித்துள்ளனர்.
தமிழகத்தில் ஆட்சியமைக்க போவது, அதிமுகவா, அல்லது திமுகவா என்பதில்
பெட் கட்டி பெருமளவுக்கு பணம் புழங்குகிறதாம் அதுபோல, குறிப்பிட்ட
தொகுதியில், யார் ஜெயிப்பார்கள் என்பதிலும் பணம் கட்டப்படுகிறது
வாட்ஸ்அப் குழு
இந்த பெட்டிங் குரூப் டிவிட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றில் பிரத்யேக
குழுக்களை ஆரம்பித்து யாருக்கும் தெரியாமல் தகவல்களை பரிமாறி
வருகிறார்களாம். வி.ஐ.பி தொகுதிகளின் லிஸ்ட் மற்றும் அதற்கான பெட்டிங் பணம்
எவ்வளவு என்பது போன்ற தகவல்கள் இந்த வாட்ஸ்அப் குழுக்கள் மூலம்
பரப்பப்படுகிறதாம்.
பல ஆயிரம் ஏஜென்டுகள்
இந்த பெட்டிங்கிற்கு டெல்லி மற்றும் மும்பை தலைமையிடம். சென்னையில்
இவர்களுக்காக ஏஜென்ட்களும் புக்கிகளும் இருக்கின்றனராம். எப்போதும் ஆன்
லைனில் இருக்கும் புக்கிகளுக்குக் கீழ், ஏஜென்ட்கள் செயல்படுவார்கள்.
சென்னையில் மட்டும் ஏஜென்ட்களையும் புக்கிகளையும் சேர்த்து பல ஆயிரம் பேர்
இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்படியானால் சூதாடிகள்
எண்ணிக்கை பல மடங்கு இருக்கும்.
பட்டியல்
சூதாட்டத்தில் இறங்கும் பொதுமக்கள், ஏஜென்ட்களை அணுகுவார்கள். ஏஜென்ட்களை
ஒருங்கிணைக்கும் புக்கி, அவர்களிடம் ஒரு பட்டியலைக் கொடுப்பார். அதில்
வரிசையாக எந்தக் கட்சி வெற்றிபெறும் அல்லது தோற்றுப்போகும், விஐபி
வேட்பாளர்கள் எத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பார்கள்?
எந்தத் தொகுதியில் எந்த வேட்பாளர் ஜெயிப்பார் என்பதில் ஆரம்பித்து பெட்டிங்
விவரங்களும், அவை ஒவ்வொன்றுக்குமான தொகையும் நிர்ணயிக்கப்பட்டிருக்கும்
பணம் கொடுக்கல், வாங்கல்
பட்டியலை சூதாடுவோரிடம் காண்பித்து, அவர்கள் விருப்பப்பட்டதை தேர்வுசெய்யச்
சொல்வார்கள். அதற்கான பணம் வசூல் செய்யப்படும். அப்படிக் கிடைத்த மொத்தத்
தொகையும் புக்கிகள் மூலமாக கம்பெனிக்குப் போகும். அதேபோல், தேர்தல்
முடிந்ததும், கம்பெனி புக்கியிடம் பணம் தரும். புக்கி ஏஜென்ட்கள் வழியே
பெட் கட்டியவர்களுக்குப் போய்விடும்.
கமிஷன் பிரமாதம்
10 லட்சம் பெட்டிங் தொகை வசூலித்துக் கொடுத்தால், ஒரு மணி நேரத்தில் 25
ஆயிரம் ரூபாய் வரை கமிஷன் தொகை ஏஜென்டுக்குக் கிடைக்கும். கடைசி
ஏஜென்டுக்கே இவ்வளவு தொகை என்றால், பல ஏஜென்ட்களிடம் வசூல்செய்து
கொடுக்கும் புக்கிக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை கணக்கு போட முடியாது.
அதிமுகவுக்கு டிமாண்ட்
சூதாட்டம் சில வாரங்கள் முன்பு தொடங்கிவிட்டது. பணம் கட்டியவர்களில்
அதிகமானோர், அப்போதைய டிரெண்டுக்கு தக்கபடி அதிமுக ஜெயிக்கும் என்று பணம்
கட்டி இருந்தனர். இதற்கு நேர்மாறான ரிசல்ட் வந்தால்தான் பெட்டிங்
கம்பெனிக்கு லாபம் கிடைக்கும். ஏனெனில், சூதாடிகள் கட்டியது போலவே ரிசல்ட்
வந்தால், அவர்களுக்குப் பணத்தை இரண்டு மடங்காக திரும்பித்தர வேண்டும். அது
கம்பெனிக்கு நஷ்டத்தை கொடுக்கும்.
திமுகவுக்கு சலுகை
எனவே பெட்டிங் கம்பெனிகள், சுதாரித்துக்கொண்டு, திமுக ஜெயிக்கும் என்று
பணம் கட்டுபவர்களுக்குக் கூடுதல் சலுகை அளித்தது. உதாரணத்திற்கு அதிமுக
ஜெயிக்கும் என்று ரூ.1 லட்சம் பணம் கட்டி, அக்கட்சி ஜெயித்தால், பெட்டிங்
கம்பெனி ஒரு லட்சத்தோடு, கூடுதலாக 80 ஆயிரம் தருவதாக கூறியிருந்ததாம்.
லாப நோக்கம்
அதே நேரம் நீங்கள் திமுக ஜெயிக்கும் என ஒரு லட்ச ரூபாயை பெட் கட்டி ஒருவேளை
அக்கட்சி ஜெயித்தால் ரூ.1 லட்சத்தோடு, கூடுதலாக ரூ.1.20 லட்சம் தரப்படும்
என்று பெட்டிங் கம்பெனி ஆசை காட்டியிருந்தது. ஆசை காரணமாக திமுக ஜெயிக்கும்
என நிறைய பேர் பணம் கட்டுவார்கள். அதிமுக ஜெயித்தால் நமக்கு அதிக லாபம்
கிடைக்கும் என்பது பெட்டிங் கம்பெனி நோக்கம்.
கட்டுப்பாடு
ஆனால் சமீபகாலமாக, திமுகவின் விளம்பரங்கள், தேர்தல் அறிக்கை போன்றவை
அக்கட்சிக்கு ஆதரவான தேர்தல் ட்ரெண்ட்டை உருவாக்கியது. இதை உணர்ந்த
பெட்டிங் கம்பெனிகள், திமுக ஜெயிக்கும் என்று பெட் கட்டுபவர்களுக்கும்
நிறையக் கட்டுப்பாடுகளை விதித்து கட்டணத்தை மாற்றிவிட்டனவாம். இதற்கு மேல்,
திமுக ஜெயிக்கும் என யாராவது பெட் கட்டி திமுக ஜெயித்தால் அவர்களுக்கு
அவர்கள் அளித்த ரூ.1 லட்சம் மற்றும் 80 ஆயிரம் மட்டும் தரப்படும் என்று
சொல்லப்பட்டுள்ளது
கோல்மால் தொடக்கம்
ஆனால், நிறைய பேர் அதிமுக ஜெயிக்கும் என ஏற்கனவே பெட் கட்டி விட்டதால்,
திமுக வெற்றி பெறுவதுதான் பெட்டிங் கம்பெனிகளுக்கு கொழுத்த லாபத்தை தரும்.
எனவே, ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆட்டத்தின் போக்கை மாற்ற வீரர்களை விலைக்கு
வாங்குவதை போல, தேர்தலிலும் கோல்மால் வேலைகளை தொடங்கிவிட்டனவாம் பெட்டிங்
கம்பெனிகள்.
Read more at: /tamil.oneindia.com
Read more at: /tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக