ஞாயிறு, 1 மே, 2016

பிரதமர் மோடியின் பி ஏ, எம் ஏ எல்லாம் டுபாக்கூர்? ஆம் ஆத்மி எம்பி காட்டம்.. Modi’s Educational Qualifications

Allegations are being made that the PM has no qualification and degree at all,
giving false information on oath is listed as a criminal offence in the Section 191 of the Indian Penal Code. It says: “Giving false evidence. -Whoever, being legally bound by an oath or by an express provision of law to state the truth, or being bound by law to make a declaration upon any subject, makes any statement which is false, and which he either knows or believes to be false or does not believe to be true, is said to give false evidence.” புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பட்டங்கள் பற்றி டெல்லி முதல்–மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய தகவல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார். இதையடுத்து இது குறித்த தகவல்களை அவருக்கு அளிக்குமாறு டெல்லி பல்கலைக்கழகத்துக்கும், குஜராத் பல்கலைக்கழகத்துக்கும் மத்திய தகவல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறும்போது, ‘‘பிரதமர் மோடி தனது தேர்தல் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த அபிடவிட்டில் 1978–ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.ஏ., பட்டமும், 1983–ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., பட்டமும் பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகத்திலும், குஜராத் பல்கலைக்கழகத்திலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் மக்கள் கேள்வி எழுப்பினால், அந்த தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியாது என்கின்றனர். இதில் என்ன மர்மம் இருக்கிறது? ஏதாவது மோசடி உள்ளதா? சின்ன விஷயத்தில் கூட டுவிட்டரில் தகவல் வெளியிடும் பிரதமர் மோடி இதுபற்றி டுவிட்டரில் தகவல் வெளியிட வேண்டும்’’ என வலியுறுத்தினார்.  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக