செவ்வாய், 24 மே, 2016

MGR + வைகோ பின்னணியில்...புலிகள் கலைஞருக்கும், தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் செய்த துரோகம் ...

ஒரே வார்த்தையில் புலிகளை பற்றி கூறுவதென்றால் , அவர்கள் கண்ணை மூடிகொண்டு மனிதர்களை  கொன்றார்கள். அதனால் இலங்கை தமிழ் மக்கள் இனி எந்த காலத்திலும் தமிழ் இன உணர்வு என்றால் ஐயோ சாமி ஆளைவிட்டால் போதும் என்று ஓடி விடுகிறார்கள்.  
புலிகள் முதலில் எம்ஜியார் சொல்லை கேட்டார்கள். பின்பு வைகோ நெடுமாறன் சொற்களை கேட்டார்கள். இறுதிவரை வைகோவின் ஆலோசனைகளை நம்பினார்கள்.  வைகோ விஜயகாந்தை பாவித்தது போல அவர்களையும் பாவித்தார். தனது விருப்பத்தை பூர்த்தி செய்தார்.   

1. கலைஞர் கழகத்தை காத்து கண்ணியத்தை காத்து ஆட்சிக்கட்டிலில் ஏறி நல்லாட்சி நல்கிவருகையில் மொழி உணர்வில் ஈழ இயக்கங்களை ஆதரிக்கப்போய், கூடாரத்திற்குள் நுழைந்த ஒட்டகமாய் துப்பாக்கி கலாச்சாரத்தை உருவாக்கி அட்டகாசம் செய்து சென்னை தெருக்களில் வன்முறைகளை நெட் பிராக்டிஸ் செய்து கொண்ட விடுதலைப்புலிகளினால் திமுக ஆட்சியை இழந்தது, விடுதலைப்புலிகள் கலைஞருக்கு வழங்கிய முதற்பரிசு.

2. சோவியத் யூனியன் தடுமாறிய காலங்களில் இந்தியாவை இன்னொரு சோவியத்தாகவோ யூகோஸ்லாவியாவாகவோ மாற்றவிடாமல் இந்திய இறையாண்மையைக் கட்டிக்காத்த ராஜீவ்காந்தியை தமிழகமண்ணில் படுகொலை செய்து உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்தவர்கள் விடுதலைப்புலிகள். பாவம் ஓரிடம் பழி ஓரிடம் ராஜீவ் கொலையாளி என்ற பட்டத்தை ஈழத்தாய் ஜெ.வின் மூலமாக கலைஞருக்கு சூட்டியது விடுதலைப்புலிகள் கலைஞருக்கு வழங்கிய இரண்டாம் பரிசு.




3. 2009 ஏப்ரல் 26 ஆம் நாள் சிங்கள அரசு போர் நிறுத்தத்தை அறிவித்தும், தாங்கள் வெற்றி பெறுவதைத் தடுக்க இந்திய அரசு நாடகமாடுகிறது கண்டிப்பாக வெல்வோம் என்று வைகோ வகையறா பேச்சைக்கேட்டு மக்களை மனித கேடயமாக்கி முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு மகிந்தா, கோத்தபாயவிற்கு இணையாக பங்காற்றிய விடுதலைப்புலிகள் கலைஞருக்கு வழங்கிய பரிசு ஈழப்படுகொலையாளி பட்டம்.
இம்மூன்று விசயங்களிலும் கலைஞரும் அறிவாலயமும் கண்ணியம் காட்டி எதிர்த்து பதில் சொல்லாமல் இருப்பதால் திமுக அனுதாபிகள் பதில்தரவேண்டாம் என்பதில்லை. ஒன்றையும் சாதிக்காத உயிரைக்குடித்த ஈழமாயைக்காக தமிழகத்தை மறுபடியும் இருண்ட காலத்திற்கு தள்ளிவிடாதீர்கள். 
umi.jb.facebook

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக