திங்கள், 30 மே, 2016

EVKS இளங்கோவன் : அதிமுகவினர் பணத்தை இறைத்ததுதான் தோல்விக்கு காரணம்

கூட்டணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம்: இளங்கோவன் விளக்கம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம். தேர்தலில் தோல்வி ஏற்பட்டப் பிறகு பலவிதமான விமர்சனங்கள் வரத்தான் செய்யும். நாங்கள் திமுக கூட்டணியில் இருந்தோம். திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சொல்லிக்கொண்டிருப்பது சரியாக இருக்காது. என்னைப் பொறுத்தவரையில் இந்தக் கூட்டணி கண்டிப்பாக வெற்றிப் பெற்றிருக்க வேண்டிய கூட்டணி.
ஆனால் அதிமுக பணத்தை வாரி இறைத்த காரணத்தினாலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த காரணத்தினாலும், அதுமட்டுமல்ல ஓட்டு எண்ணிக்கை ஆரம்பித்த உடனேயே 10 மணிக்கெல்லாம் மோடி, ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறியதும்தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் என்றார் நக்கீரன்.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக