ஞாயிறு, 29 மே, 2016

வக்ஃப் வாரிய பொறுப்பு அமைச்சர் நிலோபர் கபிலிடம் ஒப்படைப்பு..

சென்னை: வக்ஃப் வாரிய பொறுப்பு, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபிலிடம் ஒப்படைக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், வக்ஃப் வாரியப் பொறுப்பானது, பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று, வக்ஃப் வாரிய பொறுப்பானது, தொழிலாளர் நலத்துறை அமைச்சரான நிலோபர் கபிலிடம் அளிக்கப்பட்டுள்ளது.
நிலோபர் கபில், தொழிலாளர் நலத் துறை பொறுப்பையும் தொடர்ந்து வகிப்பார் என்று தனது அறிவிப்பில் ஆளுநரின் முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார். மாலைமலர்.com   ஊரை அடிச்சு  உலையில  போடுறதுன்னா இந்த அம்மாக்கிட்டதான் டியுசன்  எடுக்கனும்ல ... இருந்து பாருங்க?  வக்ப் வாரியம் எக்கச்சக்கமான சொத்துக்களை நிர்வாகம் பண்ணனுமே?  கொடுத்து வச்ச வாணியம்பாடி ரவுடியம்மா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக