திங்கள், 30 மே, 2016

முதியவரை காலணிகளை துடைக்க வைத்த போலீசார் ... புகார் அளிக்க வந்தவராம்

உத்திரப்பிரதேச மாநிலம், முசாஃபர்நகரில் புகார் கொடுக்க வந்த முதியவரை போலீசார் தங்களது காலணியை துடைக்க வைத்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தனது செல்போன் தொலைந்துவிட்டதாக புகார் கொடுக்க காவல்நிலையத்திற்கு வந்த முதியவரிடம், தங்களுடைய காலணிகளை துடைக்குமாறு போலீசார் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து வேறுவழியின்றி அந்த முதியவர் காலணிகளை துடைத்துள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது வெளிவந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்ததுடன், முதியவரை காலணியை துடைக்க வைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.  நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக