புதன், 4 மே, 2016

உத்தரகாண்ட் நீதிபதி K.M.ஜோசெப் இடமாற்றம்..மாநில அரசின் உரிமைக்கு எதிரான ஜனாதிபதியின் உத்தரவை ரத்து செய்த நேர்மைக்கு...

Chief Justice of Uttarakhand High Court Justice KM Joseph has been transferred to Andhra Pradesh High Court. Justice K.M.Joseph was in news recently since the bench headed by him had quashed the president’s Rule in the State. புதுடில்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை ரத்து செய்து, மத்திய அரசின் நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சித்த உத்தரகாண்ட் ஐகோர்ட் நீதிபதி ஆந்திராவிற்கு தூக்கியடிக்கப்பட்டார்..உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹரிஷ் ராவத் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. இம்மாநிலத்தில் அதிருப்தி தலைவர்களால், முதல்வருக்கு எதிராக முன்னாள் 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர். பா.ஜ.விற்கு ஆதரவளித்தனர். இதையடுத்து ஹரிஷ் ராவத் அரசு, சட்டசபையில் மார்ச் 28-ந் தேதி நம்பிக்கை தீர்மானத்தை எதிர்கொள்ள இருந்தது. அதற்கு முன்பாகவே அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதுவரை எந்த கேவலமான அரசும் செய்யத்துணியாத அளவு படு மோசமான ஒரு நடவடிக்கை இதுவாகும் . நீதிமன்றங்கள் எல்லாம் மோடியின் பாத சேவை செய்ய வேண்டுமோ ? 


இதனை எதிர்த்து அம்மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப், நீதிபதி வி.கே.பிஸ்த் ஆகியோர் கொண்ட பெஞ்ச் ஜனாதிபதி உத்தரவை கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்த சூழ்நிலையில் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆந்திர ஐகோர்ட் நீதிபதியாக திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.

57 வயதான ஜோசப், கேரளாவைச் சேர்ந்தவர் 2014-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக