வெள்ளி, 20 மே, 2016

ஒரு சதவீத வாக்குகளால் வெற்றியை இழந்த திமுக கூட்டணி ... வெறும் ஒரு சதவீத வாக்குகள் அதிமுகவை வெற்றி...

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியை விட வெறும் 1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது அதிமுக. அதிமுக கூட்டணிக்கு இந்தத் தேர்தலில் 40.8 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. திமுக கூட்டணிக்கு 39.8 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இருவருக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 1 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கர பந்தாவுடன் வலம் வந்த தேமுதிக படு கேவலமான நிலைக்குப் போயுள்ளது. அக்கட்சிக்கு வெறும் 2.4 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. அக்கட்சியை விட பாஜக கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது. இரவு 8 மணி நிலவரப்படி திமுக - அதிமுக கூட்டணிகள் பெற்ற வாக்கு சதவீத விவரம்: அதிமுக கூட்டணி - 40.8%
அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் - 1.75 கோடி.
திமுக கூட்டணி மொததமாக பெற்ற வாக்குகள் - 1.68 கோடி.

திமுக - 31.6% (வாக்குகள்- 1.35 கோடி)
காங்கிரஸ் - 6.5% (வாக்குகள் 27 லட்சம்)
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 0.7% ( வாக்குகள் 3 லட்சம்)
புதிய தமிழகம் - 0.5% (வாக்குகள் 2 லட்சம்)
மனிதநேய மக்கள் கட்சி - 0.5 சதவீதம் (வாக்குகள் 1.9 லட்சம்) திமுக கூட்டணியின் மொத்த வாக்கு சதவீதம் - 39.8%
வாக்கு சதவீத வித்தியாசம் - 1 சதவீதம்.
tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக