வியாழன், 26 மே, 2016

கலிபோர்னியா பள்ளிகளில் நுழைகிறது பார்ப்பனிய வரலாறு

கலிபோர்னியா அம்பேத்கர் அசோசியேசனை சேர்ந்த தேன்மொழி சவுந்தர்ராஜன் த்திய மாநில பா.ஜ.க அரசுகள் பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களை காவிமயமாக்கிவருவது நமக்கு தெரிந்த ஒன்று தான் என்றாலும் இது இந்தியாவோடு முடிந்து விடவில்லை. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண பாடத்திட்டத்தையும் தங்களுக்கு ஏற்றபடி மாற்றுவதில் தற்போது பகுதியளவு வெற்றி பெற்றுள்ளனர் இந்துத்துவ அமைப்புகள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆறு வருடங்களுக்கு ஒரு முறை பள்ளி பாடத்திட்டங்களை மாற்றுவது வழக்கம். மாற்றப்பட்ட பாடத்திட்டங்கள் பொதுவில் வெளியிடப்பட்டு மக்களின் கருத்து கேட்கப்பட்டு மாறுதலுக்கு உட்படுத்தப்படும்.

டெக்சாஸ் மாகாணத்தில் பாடதிட்டத்தில் சாதி அமைப்பு குறித்து எதிர்மறையாக இருந்த கருத்துகளை திருத்தி சாதி அமைப்பு சிறப்பான ஒன்று என்பதாக சேர்த்துள்ளனர் இந்த அமைப்புகள்.
அதன்படி இவ்வாண்டு வெளியிடப்பட்ட உத்தேச பாடத்திட்டத்தின் வரலாறு மற்றும் சமூகவியல் பாடங்களில் இந்தியாவின் சாதி அமைப்பு குறித்தும், தலித்துகள் மீதான ஒடுக்குமுறை குறித்தும் சில குறிப்புகள் உலக  நாகரிகங்கள் என்ற தலைப்பில் இடம்பெற்றிருந்தது. சிந்து சமவெளி நாகரீகம் போன்ற  இந்திய பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு பொதுவான விசயங்களை தெற்காசிய கலாச்சாரம் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்கள். இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புடைய அமெரிக்க இந்துத்துவ அமைப்புகளான இந்து அமெரிக்க பவுன்டேசன், தர்ம நாகரிகம் உள்ளிட்ட வானரங்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து அதை மாற்ற போராடி வந்தன.
டெக்சாஸ் மாகாணம் – பாடதிட்டத்தில் சாதி அமைப்பு குறித்து எதிர்மறையாக இருந்த கருத்துகளை திருத்தி சாதி அமைப்பு சிறப்பான ஒன்று என்பதாக சேர்த்துள்ளனர் இந்த அமைப்புகள்.
சாதிய வர்ணாசிரம தத்துவத்தை இப்பாடதிட்டம் தவறாக சித்தரிப்பதாக இவர்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே டெக்சாஸ் மாகாணத்தில் பாடதிட்டத்தில் சாதி அமைப்பு குறித்து எதிர்மறையாக இருந்த கருத்துகளை திருத்தி சாதி அமைப்பு சிறப்பான ஒன்று என்பதாக சேர்த்துள்ளனர். இது குறித்து அவர்களின் இணைய தளம் தங்களின் வெற்றியாக பின்வரும் திருத்தத்தை கூறுகிறது.
அரசின் பாடத்திட்டத்தில் “வர்ண அமைப்பில் சிறு குழு அனைத்து அதிகாரங்களையும், செல்வங்களையும் கொண்டு பெரும்பான்மையினரை ஒடுக்கியது” என்று இருந்ததை மாற்றி “வர்ண அமைப்பு ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாத்திரம் வழங்கி சமூகம் சுமூகமாக இயங்க வழிசெய்தது” என்று திருத்தியிருக்கிறோம் என்று வெற்றி செய்தியாக பகிர்ந்திருக்கிறார்கள்.
கலிபோர்னியா அம்பேத்கர் அசோசியேசனை சேர்ந்த தேன்மொழி சவுந்தர்ராஜன்
இதே போன்று கலிபோர்னியாவிலும் பாடதிட்டத்தை தங்களுக்கு ஏற்றபடி மாற்ற அவர்கள் செய்த முயற்சி தற்போது பகுதியளவு தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் கோரிய சாதி குறித்த மாற்றங்கள் நிறைவேறவில்லை. மற்றபடி தெற்காசிய என்ற வார்த்தைக்கு பதிலாக இந்தியா என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன்படி  இனி சிந்து சமவெளிநாகரிகம் இந்திய நாகரிகம் என்று அழைக்கப்படும்.
தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்ற இந்துத்துவ அமைப்புகளின் திருத்தமும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இவ்விசயத்தில் இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராக போராடிவரும் கலிபோர்னியா அம்பேத்கர் பேரவையைச் சேர்ந்த தேன்மொழி சவுந்தர்ராஜன் பின்வருமாறு குறிப்பிடுகிறார், “ இந்த போராட்டம் கலிபோர்னிய பாடதிட்டத்தை குறித்தகாக இருந்தாலும்கூட இது உண்மையில் சித்தாந்தத்திற்கு இடையிலான போராட்டம். இந்தியாவில் நிலவும் சாதிய ஒடுக்குமுறையை மறைக்க இந்துத்துவவாதிகள் முயல்கிறார்கள். ஆனால் நீங்கள் உண்மையை மாற்றமுடியாது. சாதிய கொடுங்கோன்மையால் பாதிக்கப்பட்ட பல கோடி மக்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை வரலாற்றிலிருந்து மறைக்க  அனுமதிக்க முடியாது” என்கிறார்.
இந்துத்துவ அமைப்புகளோ இது போன்ற பாடத்திட்டங்களால் தங்கள் குழந்தைகள் பள்ளியில் கேலிக்கு உள்ளாக்கபடுவார்கள் என்று ஒடுக்குமுறையையே கேலி எனும் சென்டிமெண்டாக முன்வைக்கிறது. சாதிய அமைப்பின் பலனை அனுபவித்து அதன் நீட்சியாக சென்னை, டெல்லி என அதிகார மையங்களுக்கு மாறி தற்போது அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்று வசிக்கும் வர்க்கத்திற்கு ஒடுக்கப்படும் மக்களின் துன்பத்தைவிட தாங்கள் கேலிக்கு உள்ளாவோமோ என்பது பிரச்சனையாக தெரிகிறது.  பல தலைமுறைகளாக இழைக்கப்பட்ட சாதி கொடுங்கோன்மையையும், பார்ப்பனர்களை தயிர் சாதம் என்று கிண்டல் செய்வதையும் ஒன்றென சமப்படுத்தி பேசும் ஜெயமோகனின் வாதம் இங்கு நினைவுகூரத்தக்கது.
இந்துத்துவ அமைப்புகள் அமெரிக்காவிலும் அமைப்பு ரீதியில் எவ்வளவு பலமாக இருக்கிறார்கள் என்பதையும் இந்நிகழ்வுகள் காட்டுகின்றன. சாதி குறித்த திருத்தங்கள் இப்போதைக்கு ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்தாலும் அவர்கள் இதோடு விடபோவதில்லை. டெக்சாஸ் மாகாணத்தில் பெற்ற வெற்றியை கலிபோர்னியாவிலும் பெறவே அவர்கள் முயற்சிப்பார்கள்.
இந்தியாவில் எரிகிற இந்துத்துவ கொள்ளியை அணைத்தால் மட்டுமே மற்ற இடங்களிலும் வெற்றி சாத்தியம்.    vinavu.com
தொடர்புடைய பதிவுகள்
Caste Won’t Be Erased from California Textbooks, Says Committee
California community debates ‘saffronising’ textbooks, Dalits, rewriting of South Asian history
Hindutva Efforts to Rewrite History in California Schools Fail
HAF Applauds Textbook Publishers for Transformational Changes in Depiction of Hinduism in Texas

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக