புதன், 4 மே, 2016

கருத்து கணிப்புகள் ஏற்படுத்திய அதிர்வலைகள்.... நிலைமை இறுதி நேரம் வரை தெளிவில்லை?

கருத்து கணிப்பு நமீதா அ தி மு க வில் சேர்வதற்கு முன்பு எடுக்கப்பட்டது இப்போது நிலைமை வேறு இளைஞர்கள் முறுக்கு கம்பி மாதிரி முருக்கீட்டு நிக்குறாங்க ஓட்டு போட தமிழக வாக்காளர்களின் மனநிலையை படம் பிடித்தும் காட்டும் விதமாக, 'தினமலர்' நாளிதழும், 'நியூஸ் 7' தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள், அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
முதல் முறையாக, மிக பிரம்மாண்ட அளவில் நடத்தப்பட்ட, இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் பிரமிப்பை ஏற்படுத்துவதாக, பொது மக்களும், கட்சி சாராதோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் களின் எண்ண ஓட்டத்தை அறியும் வகையில், தலா, 1,000 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. அதன்படி, தமிழகத்தில், 234 தொகுதிகளில், மொத்தம், 2.34 லட்சம் வாக்காளர்களை சந்தித்து, எழுத்துப்பூர்வமாக அவர்களது கருத்து எழுதி வாங்கப் பட்டுள்ளது.  விஜயகாந்தை திமுக பக்கம் போக விடாமல் வைகோ மூலம் பி டீம்  ஆரம்பித்து, ராஜ தந்திர விளையாட்டெல்லாம் விளையாடி...சொந்த காசில் தனக்கே சூனியம் வைத்து கொண்ட கதையாகி விட்டது அம்மாவுக்கு...திமுக ஓட்டை பிரிக்க விளையாடிய விளையாட்டு இப்போ அம்மா ஓட்டையே பிரித்து
இதுவரை எந்த நிறுவனங் களும், இவ்வளவு பெரிய அளவில் மக்களை சந்தித்து, கருத்துக்களை கேட்டதில்லை.

கட்சி பாகுபாடின்றி, ஆண்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், சுய தொழில் செய்வோர், ஆசிரியர்கள், மாணவர்கள், இல்லத்தரசிகள் என, பல்வேறு தரப்பினரிடம், கருத்து கேட்டறியப்பட்டது.

பதினெட்டு முதல், 20 வயதுக்கு உட்பட்டோர்; 20 முதல், 40 வயது; 40 முதல், 60 வயது வரை உள்ளவர்கள்; 60 வயதிற்கு மேற்பட்டோர் என தரம் பிரித்து, ஒவ்வொரு தரப்பினரும், என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றனர் என்பதை அறிய வேண்டும் என்பதை மூல நோக்கமாக கொண்டு, இந்த கணிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

மாபெரும் கருத்துக் கணிப்புஎன்பதால், முடிவுகள் எப்போது வரும் என, மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு, 'நியூஸ் 7' தொலைக்காட்சி யிலும், நேற்று காலை, நமது நாளிதழிலும், முடிவுகள் வெளியிடப்பட்டன.

முதல் கட்டத்தில், கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் உள்ள, 57 தொகுதிகளின் முடிவுகள் இடம்பெற்றன. மேற்கு மண்டலத் தொகுதிகளின் முடிவுகள் மட்டுமே நேற்று வெளியாகின; ஆனாலும், ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி விட்டது. அதன் தாக்கம், அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. நடுநிலை தவறாத தினமலரின் கருத்து கணிப்பு, மிகச்சரியாக இருக்கும் என, பொது மக்களும், கட்சி சாராதவர்களும் வரவேற்றுள்ளனர்.

அதே நேரம், வெற்றி கனவில் இருக்கும் வைகோ, ராமதாஸ் போன்ற சில தலைவர்கள், இந்த முடிவுகளை விமர்சித்துள்ளனர். அவர்களது விமர்சனம், அரசியல் ரீதியானது. ஆனால், கருத்துக் கணிப்புக்கு கிடைத்த வரவேற்பும், ஆதரவும் ஏராளம்என்பதற்கு, 'தினமலர்' இணையதள பதிவுகளே ஆதாரம்.ஏராளமான வாசகர்கள், தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த, முருகவேல் சண்முகம் என்பவர், ''அ.தி.மு.க., கோட்டையை பற்றிய கருத்துக் கணிப்பிற்கே, மலரில் கருத்துக்கள் பொங்கி வழிகிறதே... இன்னமும் வரப்போகும் டெல்டா, வட மாவட்டம், தென், மத்திய மாவட்ட முடிவுகளில், என்ன நடக்கப் போகிறதோ? மலரில் பற்றிய தீ எரியப்போகிறது பலரின் மனம் மட்டுமல்ல; வயிறும்தான்,'' என குறிப்பிட்டுள்ளார்.

சாம் என்பவர், ''தமிழக மக்களின் இன்றைய மனநிலையை எடுத்துக்காட்டும் கருத்துக் கணிப்பு, இதன் துல்லியத்தை தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தும்,'' என்றும்; அபுதாபியில் வசிக்கும் தேவர், ''தினமலர் கருத்து கணிப்பு மிக சரியாக இருக்கும்,'' என்றும் பதிவிட்டுள்ளனர்.ஒரே நாளில், தமிழகம் முழுவதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, 'தினமலர்' மற்றும், 'நியூஸ் 7' இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின் தொடர்ச்சி, புதுச்சேரி உட்பட ஐந்து நாள் வெளியிடப்பட உள்ளன.

'நியூஸ் 7' இருட்டடிப்பு!: இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள், தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளதால், தமிழகத்தில், பெரும்பாலான இடங்களில், 'நியூஸ் 7' தொலைக்காட்சி ஒளிபரப்பு தெரியாதவாறு, அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் இருட்டடிப்பு செய்துள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக