வியாழன், 5 மே, 2016

கொளத்தூர் தொகுதி திமுக பிரமுகர்கள் அதிமுகவில் இணைந்தனர்..

சென்னை,மே 04 (டி.என்.எஸ்) திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியின் திமுக நிர்வாகிகள், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தனர்.> இது குறித்து அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவை 3.5.2016 (நேற்று) வட சென்னை வடக்கு மாவட்டம், கொளத்தூர் பகுதி, 64-வது வட்ட தி.மு.க. செயலாளர் கொளத்தூர் எம்.கே.லெனின், சென்னை கிழக்கு மாவட்டம், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ஆர்.ராமதிலகர் (எ) கோபாலதிலகர், 64-வது வட்ட தி.மு.க. துணைச்செயலாளர் ஜே.பாலமுருகன், 64-வது வட்ட தி.மு.க. பிரதிநிதி எல்.வின்டர், 65-வது வட்ட தி.மு.க. துணைச்செயலாளர் எஸ்.எழில் அமுதன், 65-வது வட்ட தி.மு.க. பிரதிநிதி ஜி.அய்யனார், 65 (அ) வட்ட தி.மு.க. பிரதிநிதி ஆர்.உமாசங்கர் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.  அம்மா உங்க கிட்ட இருக்கிற பணத்துக்கு  நீங்க வேணு மின்னா பிரதமர் மோடியை கூட  அதிமுகவுல சேர்க்கலாம்   ஆச்சரியம் இல்லைங்கோ 

தாய் உள்ளத்தோடு தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டதற்காக, ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியினை, அ.தி.மு.க.வில் புதிதாக இணைந்தவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக