திங்கள், 23 மே, 2016

தமிழக அமைச்சரவையில் சாதி ரீதியான இடங்கள்? யார் யாருக்கு எத்தனை?

தமிழக அமைச்சரவையில், தேவர் சமுதாயத்தினர் ஒன்பது பேர், கவுண்டர்கள் ஐந்து பேர் உட்பட, பல சமுதாயத்தினருக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
 முதல்வர் ஜெயலலிதா(பார்ப்பனர்)
 புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. முதல்வர் ஜெ.,வுடன், 28 பேர் அமைச்சர்களாகவும் பதவி ஏற்கின்றனர்.
 இதில், ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், செல்லுார் ராஜு, ஓ.எஸ்.மணியன், ஆர்.காமராஜ், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், டாக்டர் மணிகண்டன் என, எட்டு பேரும் தேவர்சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
 எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பண்ணன் ஆகிய ஐந்து பேரும், கவுண்டர் சமுதாயத்தினர்.
சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், வீரமணி, கே.பி.அன்பழகன், துரைக்கண்ணு ஆகியோர்வன்னியர் சமுதாயத்தைசேர்ந்தவர் கள்.
சரோஜா, ராஜலட்சுமி இருவரும் தலித் பிரிவினர். வளர்மதி - முத்தரையர்;
வெல்லமண்டி நடராஜன் - பிள்ளை;
பெஞ்சமின் - கிறிஸ்தவர்;
எஸ்.பி.சண்முகநாதன் - நாடார்;
கடம்பூர் ராஜு - நாயுடு;
உடுமலை ராதாகிருஷ்ணன் - செட்டியார்;
ராஜேந்திர பாலாஜி - விஸ்வகர்மா;
ஜெயக்குமார் மீனவர் சமுதாயத்தையும் சேர்ந்தவர்கள். இப்படி பல சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.- நமது நிருபர் -  தினமலர்.com    சில  மாதங்களில் கமிஷன் தகராறுகளில்  இவர்கள் பதவிகள் பறிக்கப்பட்டு  வேறு சிலருக்கு  வழங்கப்படும் .. ஆக எல்லோரும் அமைச்சர்கள் தான்.. எல்லோருக்கும் வருமானம் ஈட்ட வாய்ப்பு அளிக்கப்படும்..கமிசனில் களவு செய்யாத வரைக்கும் பதவியும் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக