திங்கள், 23 மே, 2016

வைகோ : மக்கள் நலகூட்டணி, தேமுதிக ,தா.மா.கா தொடர்ந்து கூட்டணியாக செயல்படும்... வேற வழி?

மக்களின் நலனுக்காக தே.மு.தி.க- மக்கள் நலக் கூட்டணி- த.மா.கா கூட்டணி தொடர்ந்து செயல்படும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், எந்த கட்சியும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மேலும், உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தும் தோல்வி அடைந்ததோடு, டெபாசிட்கூட வாங்கவில்லை. மேலும், இந்த தேர்தலில் தே.மு.தி.க 2.4 சதவீத வாக்குகள் மட்டுமே வாங்கியிருக்கிறது. இதனால், மாநில கட்சி அந்தஸ்தை தே.மு.தி.க இழக்கும் எனவும், இதனால், முரசு சின்னமும் தே.மு.தி.க.வுக்கு கிடைக்காது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந் நிலயில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், த.மா.கா. தலைவர் வாசன் ஆகியோர், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை இன்று (21-ம் தேதி) கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், '' தேர்தலின்போது தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பேசி வைத்துக்கொண்டு வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தனர். இதை காவல்துறையினர் தடுக்கவில்லை. மக்கள் நலனுக்காக தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா கூட்டணி தொடர்ந்து செயல்படும்'' என்றார்.விகடன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக