புதன், 25 மே, 2016

திருப்பரங்குன்ற அமரகாவியம்..... ஐந்து நாட்கள் ஆத்ம சஞ்சாரம்? லைப் சப்போர்ட் சிஸ்டம்

சட்டமன்ற உறுப்பினர் இறந்து போகிறார்.
மாவட்ட செய்தியாளர் தகவலை செய்தியறைக்கு தெரிவிக்கிறார். செய்தி ஒளிபரப்பாகிறது.; கட்சி, குடும்பம் என எல்லா தரப்பினரும் அவசரமாக மறுக்கிறார்கள்.
அவர் சிகிச்சையில் இருப்பதாக சொல்கிறார்கள்.
அவசர அவசரமாக வேறு மருத்துவமனைக்கு மாற்றுகிறார்கள்.
செய்தி நிறுவனத்துக்கும், மாவட்ட செய்தியாளருக்கு தொடர்ந்து கண்டனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
.முதலில் மரண செய்தியை உறுதி செய்த மருத்துவர் மொபைல் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
நான்கு நாட்களாக தவறான செய்தியை வழங்கிவிட்டதாக அவரை வாட்டி எடுக்கிறார்கள்.
.அரசின் பதவியேற்பு வைபவத்திற்கு பிறகு மரணசெய்தி அதிகாரபூர்வமாக வெளியிடப்படுகிறது.
.இம்முறை அந்த செய்தியாளர் அந்த செய்தியைப் பற்றி பேசவே இல்லை. ஒரே செய்தியை அவரும் எத்தனைமுறைதான் சொல்லுவார்."
.தற்போது எழுதிவரும் "பொற்கால ஆட்சியின் தொடக்கத்திலேயே " என்னும் நாவலில் இருந்து ஒரு பகுதி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக