ஞாயிறு, 8 மே, 2016

பா.ம.க.,வுக்கு சாதகமான அலை' இன்னும் நம்புகிறார் அன்புமணி... விஜயகாந்த் விமர்சனம்

சென்னை: ''ஊடகங்கள் நடுநிலையாக செயல்பட வேண்டும்,'' என, பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி தெரிவித்தார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகம் முழுவதும் எங்கள் பிரசாரத்துக்கு மக்கள் அதிக அளவில் வருகின்றனர். அவர்களிடம் பேசியதிலிருந்து, தி.மு.க., -- அ.தி.மு.க., வேண்டாம் என நினைக்கின்றனர்.
திராவிட கட்சிகள், இலவசங்களை கொடுத்து, மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்கி விட்டனர். பா.ம.க., தேர்தல் அறிக்கையில் உள்ள ஷரத்துக்களை, 60 சதவீதம் தி.மு.க., திருடி விட்டது.   பங்காரு அடிகளிடம் ஆசிநேற்று பகல், 12:15 மணிக்கு, ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு, அன்புமணி வந்தார். அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றார். பகல், 12:50 மணிக்கு, ஆதிபராசக்தியை, 108, 1,008 போற்றி அர்ச்சனை செய்து, அன்புமணி வழிபட்டார். அதன்பின், பிரசாரத்திற்கு புறப்பட்டு சென்றார்.... தேர்தலுக்கு பிறகு அங்கேயே நிரந்தரமாக தங்கி விடலா

மிச்சம் மீதி இருப்பதை, அ.தி.மு.க.,வும் திருடி விட்டது. ஆனால், ஆட்சியிலிருந்த ஜெயலலிதா எதையும் செய்யவில்லை.மதுவிலக்கை அமல்படுத்த, பா.ம.க.,வால் மட்டுமே முடியும் என, மக்கள் நினைக்கின்றனர்.இந்த தேர்தல், பா.ம.க.,விற்கு சாதகமாக உள்ளது. சாதகமான அலை வீசுகிறது. கருத்துக் கணிப்பு என்று சொல்லி, தங்கள்
கருத்துக்களை, மக்கள் மனதில் ஊடகங்கள் திணிக்கின்றன. இச்செயலில் உள்நோக்கம் உள்ளது.பொருளாதார வளர்ச்சியில், தமிழகம் கடைசியில் உள்ளது. பலரும் ஆசைப்படுவது போல, இந்த தேர்தல் முடிவுகள் இருக்காது. இதை உணர்ந்து, ஊடகங்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறினார்.பங்காரு அடிகளிடம் ஆசிநேற்று பகல், 12:15 மணிக்கு, ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு, அன்புமணி வந்தார். அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின், பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றார். பகல், 12:50 மணிக்கு, ஆதிபராசக்தியை, 108, 1,008 போற்றி அர்ச்சனை செய்து, அன்புமணி வழிபட்டார். அதன்பின், பிரசாரத்திற்கு புறப்பட்டு சென்றார்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக